பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

அப்பாத்துரையம் - 4

இதுபோல, ‘வினோதக்கூத்து', ‘பொதுவியல்' என்ற பெயர் கள், களி நாடகப் பண்பைத் தெளிவாகக் காட்டுபவை ஆகும்!

'விநோதம்' என்பது, பொது மக்கள் விரும்பும் புதுமைச் சுவை - களியாட்டம்!

'பொது' என்ற சொல், 'அது, பொது இடத்தில் நடத்தப் படுவது' என்பதை உணர்த்தும்!

மலையாள நாட்டில், இந்த இருவகைக் கூத்துக்களே இன்று வரை, 'சாக்கியார் கூத்து', 'ஓட்டந் துள்ளல்' என்ற பெயர்களுடன் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் விழாக் காலங்களில் நடை பெறுகின்றன!

முன்னது உயர்குடிப் பார்ப்பனரால் கோயில்களுக் குள்ளும் பின்னது - மக்கட் புரோகிதர்களால் (நம்பியார்களால்) பொது இடத்திலும் நடப்பவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

'சாக்கியார் கூத்து' என்பதன் தமிழ் வடிவம், 'சாக்கையர் கூத்து' என்பதே!

சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்தே ஆகும்.

அத்துடன், இன்று திருவனந்தபுரத்தில் அதை ஆடிக்காட்டும் பறவூர்ச் சாக்கையர் குடியினரே சிலப்பதிகார காலத்திலும் அதைச் சேரன் செங்குட்டுவன்முன் ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது!

-

இரண்டாவதாக கிரேக்க நாடகங்களில் பேரளவாகக் காணப்படும் பின்னணி இசைப் பாடல்கள், ஓர் குழுவினால் (Chorus) பாடப்பட்டவை!

சைக்

இதுபோன்ற பின்னணிப் பாடல்களை நாம், மலையாள

நாட்டின் கதைகளில் காண்கிறோம்!

சிலப்பதிகாரத்தில்

வரும் வரிப் பாடல்கள்

இத்தகையவையே என்பதை எவரும் எளிதில் காணலாம்!

உண்மையில், சிலப்பதிகார வரிப் பாடல்கள், தமிழ்ப் புலவர்களின் கவனத்தை ஈர்ப்பதைக் காட்டிலும், இன்று உலக அறிஞர்களின் - உலகின் மக்கட் கலைப் பாடலார்வலர்களின் கவனத்தையே மிகுதியாக ஈர்த்து வருகின்றன!