பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

255

மூன்றாவதாக - தமிழர், 'தோல்' (இதிகாசம்) என்ற தங்கள் பழங்கால மக்கள் மரபுக் காவியங்களையும், நாடகங்களையும், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகவே இயற்றி வந்தனர் என்று அறிகிறோம்.

சிலப்பதிகாரம், அவ்வாறான ஓர் உரையிடையிட்ட பாட்டு டைச் செய்யுளே ஆகும்.

மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்குச் 'சம்பூ' என்பது பெயர்; சமஸ்கிருத நாடகங்கள் முழுவதும் இவ்வாறே இயற்றப்பட்டுள்ளன!

நான்காவதாக - உலகம் முழுவதுமே நாடக மேடைகள், முதலில் - தெருக்கூத்து மேடைகள் போல நாற்புறமும் திறந்தே இருந்தன!

மக்கள் நாற்புறமுமிருந்து பார்ப்பதற்கு வாய்ப்பாகவே பாரிய உருவம் தரும் முக மூடிகளும், உடற் சட்டங்களும், பெரும்படியான அவிநயங்களும் இடம்பெற்றன!

கிரேக்க நாடகங்களிலும் - தென் கிழக்காசியாவெங்கணும் முக மூடிகள் பேரிடம் பெற்றதற்குக் காரணம், இதுவே!

கதகளி, சாக்கையர் கூத்து முதலிய மலையாள நாடகங் களிலும் நாம், இதே பண்பைக் காண்கிறோம்! இப்பண்பு, சிலப்பதி காரத் தமிழக மரபுடன் உலகை இணைப்பதாகும்!

நாடக மேடை ஒரு புறமாக ஒதுங்கிய பின்னரும், காட்சி மாற்றம் - களமாற்றம் குறிக்கும் சித்திர வண்ணத் திரைகள் நெடு நாள் ஏற்படவில்லை; இதனால், ஞாயிறு தோற்றம் - நிலாத் தோற்றம் ஆகியவற்றை, சேக்சுப்பியர் போன்ற கவிஞர்கள், வருணனைகளை மிகுதியாகக் கையாண்டே காட்ட வேண்டி இருந்தது.

இதுமட்டுமன்று; ஒரு காட்சி முடிந்தது என்பதைக் காட்ட, சேக்சுப்பியர் போன்ற கவிஞர்கள், மணியடித்துக் காட்டுவது போல் காட்சி இறுதியில் ஓர் இரட்டை எதுகையிட்டுக் காட்டினர்!

இதே பண்பினை நாம், சிலம்பு, மேகலைகளிலே ஒவ்வொரு காட்சி அல்லது காதையும் முடியும் இடங்களில் ‘என்' என்ற தனி முடிப்பில் காண்கிறோம்!