புதியதோர் உலகம் செய்வோம்
1259
பெரும்பான்மையான பொது மக்களின் விடுதலை நோக்கியே பரவிவரும் இயக்கம் ஆகும்!
எழுஞாயிறு (உதயசூரியன்) (உதயசூரியன்) கீழ்க்கோடி கீழ்க்கோடி வானில் எழுந்தாலும், முழு வானளாவிக் கிழக்கு மேற்காகச் சுற்றிச் சென்றும் - பருவந்தோறும் தெற்கு வடக்காகச் சுற்றிவந்தும் உலகளாவ ஒளி வீசி வளந்திகழ்விப்பது போல, திராவிடப் பேரியக்கமும் தமிழகத்தில் எழுந்தாலும், தென்னக மளாவித் ததும்பிப் பொங்கி வழிந்து, இந்திய மாநிலம் முழுவதும் ஒரு புத்தம் புதிதான உலகு இதுவரை காணாத புரட்சிகரமான தேசியமாக மலர்ந்து வருவதே ஆகும்!
ஒரு புதுப்
இது மட்டுமன்று! உலகளாவ இன்று வளர்ந்துவரும் சமதரும் பொதுவுடைமை இயக்கங்கள் போலவே, திராவிட இயக்கமும், சாதி - சமய- இன வேறுபாடற்ற உயர்வு தாழ்வற்ற - வர்க்கபேதமில்லாத ஒரு புதிய மனித சமுதாயத்தை உருவாக்குவதனையே குறிக்கோளாகக் கொண்ட இயக்கம்
ஆகும்!
-
இந்தியாவில் உலகத்தில் நாம், பல்வேறுபட்ட இயக்கங்களைக் காண்கிறோம் - கண்டு வருகிறோம்! அவற்றுள் பலவும், நாட்டியக்கங்களாக ஒரு நாட்டு எல்லைக்குள் கட்டுப்பட்டவையாக அமைபவை; வேறு பல இயக்கங்கள், நாடு கடந்து பல நாடுகளிலும் உலகளாவப் பரவி வருவதைப் பார்க்கிறோம்!
இந்த இரண்டு வகைகளிலுமே, சமுதாய இயக்கங்களாக சமுதாய, பொருளாதார இயக்கங்களாக - மொழி, கலை, இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களாக - மக்கள் இயக்கங்களாக மக்கள் நிலை இயக்கங்களாக அன்பு, அருள் இயக்கங்களாக - அதாவது, சமய இயக்கங்களாக ஓருலக இயக்கங்களாக விளங்குபவை, மிக மிகச் சிலவே!
-
அதுபோலவே
தமிழ் இயக்கமும், தமிழியக்க மறுமலர்ச்சியாகிய திராவிட இயக்கமும், முதலில் கூறப்பட்ட 'நாட்டியக்கம் - உலக இயக்கம்' என்னும் இருவகை இயக்கப் பண்புகளும் அளாவி, மூன்றாவது கூறப்பட்ட சிறப்புப் பண்புகள் யாவுமே வந்து தொகுதி, பொன்மலர் - மணமும் உயிர்ப்புமுடைய