(260
பொன்மலர்
-
அப்பாத்துரையம் - 4
வாடாது என்னும் புதுமை நலமும், மணமும் மாறாத உயிர் வளப்பமுடைய பொன்மலர் - என்று கூறத்தக்க தனிப் பெருஞ் சிறப்பு உடைய தாகும்.
-
சாதி வேறுபாட்டை எதிர்க்கும் இயக்கங்கள் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கத் தயங்குவதும் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்க்கும் இயக்கங்கள் சாதி வேறுபாட்டை எதிர்க்கத் தயங்குவதும் - இவ்விரு சார்பான இயக்கங்களுமே பொருளாதார வேறுபாட்டை எதிர்க்காமல் அல்லது எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்து வருவதும் - இதுபோலவே, இம்மூவகையினர்களும் நிற வேறுபாட்டை இன ஆதிக்கத்தை அல்லது மொழி ஆதிக்கத்தை எதிர்க்காமல் மௌனம் சாதிப்பது அல்லது ஆதரிப்பதும், உலகெங்கணும் பொதுவாக இந்தியாவில் சிறப்பாகக் காணத்தக்க செய்திகள் ஆகும்.
திராவிட இயக்கம் இவற்றினின்று வேறுபட்ட - தனிப்பட்ட தன்மையுடைய இயக்கம் ஆகும்.
இதுமட்டுமோ? திராவிட இயக்கம், முழுநிறை இடது சரியான - முழுநிறை முற்போக்கான - முழுநிறை புரட்சி இயக்கம் மட்டுமன்று; அதுவே ஓர் ஒப்புயர்வற்ற குருதியில்லாப் புரட்சி செய்யும் இயக்கமும் ஆகும்!
திராவிட இயக்கத்துக்கு
-
உலகின் மற்ற சமதரும,
பொதுவுடைமை இயக்கங்களுக்கு இல்லாத ஒரு தனித் தன்மை உண்டு.
பொதுவாக உலகின் சமதரும - பொதுவுடைமை இயக்கங்க ளெல்லாம், அரைகுறை டதுசாரி இயக்கங்களாக மட்டுமே யங்குகின்றன; ஏனெனில், அவை, பொருளாதாரத்தில் மட்டுமே இடதுசாரிக் கொள்கையை அதாவது முற்போக்குக் கொள்கையை வலியுறுத்துகின்றன; மற்றப் பலப்பல அல்லது சில சில துறைகளில் அவை, பிற்போக்குக் கருத்துக்களைப் பின்னணியில் உள்ளீடாக மறைத்து வைத்துக் கொண்டோ பிற்போக்குப் பண்புகளைத் தம்மை அறியாமலே ஏற்று அவற்றுடன் கலந்து இணைந்து கொண்டோ - அவற்றை மறைமுகமாக ஊக்கி வளர்த்துக் கொண்டோ போவதைக்
காணலாம்.
-