பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

263

திராவிட இயக்கத்தின் தனித் தன்மைக்குரிய ஒரு கூறான தமிழ்த் திருமண இயக்கம், இம்மெய்ம்மைகளை எண்பித்துக் காட்டுவது ஆகும்.

அது, தமிழரின் அண்மைக் கால - இடையிருட்கால அடிமைக் காலப் போலிப் பழமையினை நீக்கி, தொல்காப்பியர் கால திருவள்ளுவர் கால சங்க கால மெய்ப் பழமையின் முற்போக்குக் கூறுகளையே மறுமலர்ச்சியாகக் கொண்டு வருகிறது!

அதே சமயம், அது, அறிவுலகின் புதிய சீர்திருத்த நோக்கங்களையும்- முறைகளையும், அப்பழமை நலங்களுடன் இணைந்த புதுமை நலங்களாக வளர்த்து இணைக்கிறது!

உண்மையில், திராவிட இயக்கம் என்பது, ‘மனித இனம்' என்னும் மாபெரும் மண மேடையிலே, தீமைகள் அகற்றப்பட்ட பழமை அதாவது அழகுப் பழமை என்ற மணப் பெண்ணுக்கும் - அறிவின் மீது, அன்பு - அருள் அதாவது மனித இனப் பாசம் என்னும் சிற்றுளியால் செதுக்கப்பட்ட புதுமை அதாவது அறி வார்ந்த ஆற்றற் புதுமை என்ற மணமகனுக்கும் இடையே நிகழ்த்தப் பெறும் ஒரு மாபெருந் திருமண இயக்கமே ஆகும்!

பழமை - கலை!

புதுமை - அறிவு!

தகாப் பழமை கலையன்று

கொலை!

தகாப் புதுமை அறிவன்று –

ஆனால்,

-

அழிவு!

மேலும்,

பழமை - பெண்!

புதுமை - ஆண்!

ஆனால்,