4
அப்பாத்துரையம் - 4
தமிழகத்துக்குப் புறம்பே 'யாம் திராவிடர்' எனக்கூற எவர் முன் வருகின்றனர் என்று கேள்விகள் சிலபோது சிலவிடங்களில் கேட்கப்பட்டு வருகின்றன. கேட்பவர் நல் தமிழர், தமிழர் நண்பர். தமிழார்வத்தில் குறையாதவராதலால் அதுபற்றிய சில நட்புமுறை விளக்கம் தர விரும்புகிறோம்.
தமிழர் தாய்மொழி என்ற ஒரு பொருளிலேயே இன்று தமிழ் என்ற சொல் வழங்குகிறது. ஆனால் தமிழ் பிற மொழிகளைப் போல் ஒரு தாய்மொழிமட்டுமன்று. அது ஒரு இன மொழியும்கூட இவ்வகையில் அது அவ்வினத்தவருக்குரிய பிற தாய் மொழிகளுக்கும் அவற்றின் நாட்டியக்கங்களுக்கும் முன்னோடியும் முன்னணியும் ஆகும். இது மட்டுமன்று அது எல்லா இனங்களையும் போன்ற ஒரு இனத்தின் முன்னோடி மொழிமட்டுமன்று. தனிப்பட்ட பண்பாடும் வரலாற்றில் தனிப்பட்ட இடமும் நோக்கமும் கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தின் தாழ்த்தப்பட்ட மொழிகளின் எதிர்ப்பரங்கமாகும்.
முன்னணி
திராவிடம் என்ற சொல் இங்ஙனம் இனம் குறிப்பது காரண மாகவே தமிழ் என்ற சொல்லினும் நிறைந்த. விரிவுடைய பொரு ளை இன்று தருகிறது. இதே பொருளில் தமிழ் என்ற சொல் முன் வழங்கியதுண்டு. திராவிடர் அனைவரும் தம் தாய்மொழி தமிழ் எனக் கொண்டிருந்த காலம் உண்டு. அன்று தெலுங்கர் தாய் மொழியும் கன்னடியர் தாய்மொழியும் மலையாளிகள் தாய் மொழியும் திருநெல்வேலித் தமிழ், தஞ்சைத் தமிழ், கோயமுத்தூர்த் தமிழ் என்ற நிலையிலேயே இருந்தன.
வடமொழியாளரால்
‘திராவிடம்’ என்ற சொல் பொதுவாகத் தென்னாட்டையும் தென்னாட்டு மொழியையும் 'தமிழ்' என்ற சொல் தமிழகப் பரப்புக் குறுகிய பிற்காலத்தில் சிறப்பாகத் தமிழையும் பொதுவாக எல்லா மொழிகளையும் குறிக்க வழங்கிற்று. திராவிட வேதம், திராவிட மாபாடியம் என்ற
இடங்களில் அது தமிழையே குறித்தது. எனவே திராவிடத்திலிருந்து தமிழ் வந்ததோ தமிழிலிருந்து திராவிடம் வந்ததோ இரண்டும் தொடர்புடைய சொற்கள், இரண்டின் கருத்தும் தொடர்புடையவை என்பதில் ஐயமில்லை. இரண்டு சொற்களையும் பொதுப்பொருளில் தென்னிந்தியா