பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

அப்பாத்துரையம் - 4

-

இவை மட்டுமோ? காதலை வெறும் இன்பமாக போரை வெறும் அழிவாக

-

கடவுளை வாழ்க்கை வெறுத்த துறவிகளுக்குரிய ஒரு வறட்டுப் பண்பாகக் கண்டனர் - மற்றவர்கள் - ஏனைய இனத்தவர்கள்!

ஆனால் தமிழனோ, காதலை ஒரு போராக - போரை ஒரு காதலாக- இரண்டையும் வாழ்முதலாகிய வாழ்க்கையின் முதல்வனாகிய கடவுள் நோக்கிய பண்புகளாகக் கொண்டான்!

காதலை ‘அகத்துறை' என்று கொண்டனர் தமிழர்; ஆனால் அதே சமயம், அதை அவர்கள், இரு திசைப் பண்பாக சமத்துவப் பண்பாகக் கண்டனர்!

ஒரு திசைக் காதலை அவர்கள், 'கைக்கிளை' என்றும், சமத்துவமில்லாக் காதலை, 'பெருந்திணை' என்றும், தகாக்காதல் அல்லது பொருந்தாக் காதல்களாக ஒதுக்கினர்!

இருதிசைச் சமத்துவப் பண்புடைய ய காதலையே, தொல்காப்பியர், ‘அகத்தின் அகம் - அகன் ஐந்திணை அல்லது அன்பின் ஐந்திணை' என்று சிறப்பித்தார்!

காதலில் ஊடல் என்பது பெண்ணுரிமை; பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்புரிமை!

தமிழ்க் காதல், இவ்வாறு ஊடலும் கூடலும் விரவிய ஓர் அன்புப் போர்ப் பண்பாக - வெற்றி பெற்றவர் இன்பம் வழங்க - தோல்வியுற்றவரே அதைப் பெறுவதாக அமையும் ஓர் இன்பப் போராட்டப் பண்பாக அமைவது ஆகும்!

தமிழ்க் காதலின் இதே இருதிசைச் சமத்துவப் பண்பு, தமிழ்ப் போருக்கும் - அதாவது, தமிழர் கண்ட புறத்துறையாகிய அறப்போர் முறைக்கும் உரியதாகும்!

தமிழர் அகத் துறையின் ஏழு திணைகளுக்கு இணையாகவே புறத்துறையிலும் ஏழு திணைகள் வகுத்திருந்தனர்; இங்கும், தொல்காப்பியர் இருதிசைச் சமத்துவப் பண்பை வலியுறுத் தியதன் மூலம், ‘தமிழ்ப் போர்' என்பது, ஒரு சரிசமத்துவ அன்பு வீர விளையாட்டுப் போட்டிப் பண்பே என்பதை நாட்டினார்!

ஒரு

ஏனெனில், அகத் துறையைப் போலவே புறத் துறையிலும் திசைப்பட்ட போரும் போரும் சமத்துவமற்ற சமத்துவமற்ற போரும்