(268
அப்பாத்துரையம் - 4
வேர்ப்பண்பைத் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண ஏடுகளிலும், இதன் படர் கொடி வளத்தைத் தமிழ்ப் பக்தி இலக்கியம் - இசுலாமிய மறை ஞான (சூபி) இலக்கியம் மேலைக் கிறித்தவ உலகின் மறைஞான (Mystic) இலக்கியம் ஆகியவற்றிலுமே காண்டல் தகும்!
O
'சமயம்' என்ற தமிழ்ச் சொல் - சமைதல் (பருவமடைதல்), சமைத்தல் (உணவு ஆக்குதல்) என்ற சொற்களுடன் தொடர்பு டையதாய், கடவுள் வழிபாட்டு நிலையில்; மனித இனநாகரிகம் அடைந்துள்ள மலர்ச்சிப்படி அல்லது பக்குவ நிலையைக் குறிப்பது ஆகும்.
-
காதல் அன்பைச் சிற்றின்பம் - கடவுளன்பைப் பேரின்பம் - என்று கூறும் வழக்கு; இன்பத்துக்குரிய நிலையும் ஒருங்கே வீடு என வழங்கும் வழக்கு; தலைவன் - தலைவி அல்லது இறைவன் - இறைவி என வீட்டரசன்- வீட்டரசியரையும், நாட்டரசன் - நாட்டரசியோடும், முழு முதல் இறைவனாகிய கடவுளோடும் இணைத்து ஒரே சொற்களால் கட்டும் வழக்கு ஆகியவை, தமிழ் மொழியிலேயே - தமிழ்ச் சொற்களிலேயே அமைந்த பக்தி தத்துவ, நாயகி - நாயக பாவப் பண்பாட்டின் விதைப் பண்புகள் ஆகும்.
வெறியாட்டு - பலி அல்லது யாகம் - தெய்வங்களிடம் பேரம் செய்து நலங்கள் வேண்டும் வணிகப் பண்பு வேண்டுகோள் பண்பு (பிரார்த்தனை) - வெறுப்பு - வேதாந்தம் (நிலையாமை அல்லது காஞ்சித் திணை) ஆகியவற்றையெல்லாம் புறப் புறத்திணை ஆக்கி, இறை உயிர் அன்பிணைவையே அன்பின் ஐந்திணையுள் அடக்கிக் காட்டிய தொல்காப்பிய இலக்கணமே உலகளாவிய தத்துவ, நாயகி -நாயக பாவப் பண்பின் வேர்த்திறம் ஆகும்; அதுவே பரிபாடல் - திருவாசக - திருக்கோவையார் - தேவார நாலாயிரப் பிரபந்தங்கள் ஆகிய தமிழ்ப் பக்தி ஏடுகள்; மறைஞானியராகிய உமர்கய்யாம், ஜாமி ஆகிய பாரசிகக் கவிஞர்களின் இறையுணர்வேடுகள்; தாவீது, சாலமோன் ஆகிய அரச பக்தர்களின் பக்திப் பாசுரங்கள் ஆகியவற்றின் மறைஞான தத்துவங்களைச் சரிவர உணர்வதற்குரிய மறை திறவும் ஆகும்.
-