பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




௭. பாரதப் பெருநிலம் : முப்பேரியக்கம் கண்ட மூவா முழு முதல்

நிலம்!

பாரத நாடு - பழம் பெரும் நாடு! பாரினில் இதற்கிலை எங்குமோர் ஈடு!

தேசியக் கவிஞர் - தமிழ்த்தேசியக் கவிஞர் பாடிய இந்தப் பாட்டு, இப்போது உண்மையிலேயே பழம் பாட்டாகப் போய் விட்டது!

பாட்டின் பொருள் உணர்ந்து பாடினால்தானே, பழம் பாட்டு பதங்கெட்ட பழம் பாட்டாய் - பழங் கஞ்சியாய்ப் போய் விடாமல்,புத்தூக்கம் தந்துகொண்டிருக்கும் பெரும்பாட்டாய் - பழம்பெரும் பாட்டாய் - தேசிய வளமூக்கும் தேசியப் பாட்டாய் இயலமுடியும்!

இப்பாட்டின் பின்னணியிலுள்ள பழம் பெருமைக்குரிய பொருள், பாரா நாட்டின் பழம் பெரும் வரலாற்றில் கரந்து கலந்துள்ள முப்பேரியக்க வரலாறே ஆகும்!

இவ்வரலாறு கண்டுணராத பாரத மக்களுக்கு, பாரதப் பெருமை, வெறும் வீம்புப் பெருமையாக மட்டுமே அமைய முடியும்!

முப்பேரியக்கம் கண்ட பாரதத்தின் இப்பெரும் வரலாற்றைத் தம் அறிவுத் தாய் நிலமாகக் கொண்ட தமிழர் - திராவிட இயக்கத்தார், அதனைப் பாரதமெங்கும் - பாரதத்தின் புதுப் பருவ வளம் காண உண்மையிலேயே துடிக்கும் ஆர்வமுடைய பார்த