புதியதோர் உலகம் செய்வோம்
271
து
மக்களெல் லாரும் உணரும்படி பரப்பிடல் வேண்டும்! இது அவர்கள் நீங்காக் கடன் ஆகும்!
வாழ்வில் என்றோ ஒரு நாள் -ஒரு பொழுது உணர்ச்சி வசப்பட்டு, ஒரு பாட்டுப் பாடி விட்டவனும் பாவலன்தான்! காவியம் - காவியங்கள் பல பாடிப் புகழ் ஈட்டியவனும் பாவலன் தான்!
வாழ்வே காவியமாக - காவியங்கள் பலவற்றை ஊக்கும் காவியமாக வாழும் பாவலவனும் ஒரு பாவலன்தான்!
‘இயக்கம்' என்ற பெயரையும் நாம் இவ்வாறு முப்படிகளின் வேறுபாடு மறந்து ஒரு நிலையுற உணர்ந்து வருகிறோம்.
பாரதப் பேரியக்கங்களைப் பாரத மக்களே காணாமல் மறந்துவிட நேர்ந்ததற்குரிய சூழ்நிலைக் காரணம் இதுவே!
உலகின் பல இயக்கங்கள், நாள் - மாத-ஆண்டுக்கணக்கில் நிலவும் இயக்கங்களாகவும், ஊர் - வட்டம் - மாவட்டம் எனப் பரவி மறதியுட்பட்டுவிடும் இயல்புடையனவாகவும்
இயன்றுள்ளன!
உலகில் இவ்வாறன்றி, நூற்றாண்டு கடந்து நூற்றாண்டாக - நாடு கடந்து நாடாக - உலகெலாம் பரவி, நின்று நிலவிப் புது வாழ்வும் - புது வளமும் ஊக்கிவரும் பேரியக்கங்களும் உண்டு.
வை, வரலாறு கண்ட இயக்கங்கள்!
பிரெஞ்சுப் புரட்சி -அமெரிக்க விடுதலைப் புரட்சி இரஷ்ய நாட்டின் சோவியத் புரட்சி - இவற்றுக்கெல்லாம் மூலமாய் இயன்றிருந்த ஐரோப்பியச் சீர்த்திருத்தப் புரட்சி (Reformation) அதனை உள்நின்று ஊக்கிய உயிர்த் துடிப்புப் புரட்சியாகிய ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் (Renaissanec) ஆகியவை இத்தகைய வரலாறு கண்ட உலகப் புரட்சி இயக்கங்கள் ஆகும்!
இந்த இரண்டாவது வகை இயக்கங்களும் கடுகெனச் சிறுத்துவிடும் அளவு பாரித்தகன்று, பாரளாவ - காலமளாவ வளர்ந்து வளங்கொண்ட பொங்குமாவள இயக்கங்களே பாரதப் பெரு நாடு கண்ட மும்மைப் பெரும் பேரியக்கங்கள்!