பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

273

இந்தியாவிலே திராவிடப் பேரியக்கத்தின் விளைவாக ஒரு புதிய இந்தியா எழும்வரை, நாம் இன்னும் இடையிருட் காலத்தைக் கடந்து விட்டதாகக் கூறமுடியாது!

நான்காவது காலமே கி.பி.1500க்கு இப்பாற்பட்ட தற்காலம் அல்லது நம் காலம் ஆகும்.

நாம் மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை உலக இயக்கங்கள் - புரட்சிப் பேரியக்கங்கள் - மலர்ச்சிப் பேரியக்கங்கள், உலகெலாம் பரவி வந்த- பரவி வருகிற ஊழி இதுவே!

இதுமட்டுமன்று; பாரதத்தின் முப்பேரியக்கங்களின் முழு ஒளியும் திராவிடப் பேரியக்கமும் மூலம் பாரதத்தில் பரவத் தொடங்கியுள்ள காலமும் இதுவே என்னலாம்!

ஆனை எவ்வளவு பெரிது என்பது, ஆனைக்குத் தெரியாது; அதன் கண் சிறிது; ஆனையின் பேரளவைக் கண்டு கூறுபவன் மனிதனே!

ஆம்; வரலாற்றை ஆக்கிய உலகம் கீழை உலகம்! ஆனால் வரலாற்றை ஆராய்ந்து எழுதிப் படைத்துவரும் உலகம் மேலை உலகம்!

-

மனித இன வரலாற்றின் நீள அகல ஆழ உயர - நுட்ப திட்பங்கள் முழுவதையும் இன்னும் வரலாற்றாய்வாளர்கள் முழு துறழக் காணவில்லை; ‘காண இருக்கின்றனர்' என்ற நிலையின் காரணம் இதுவே!

வரலாற்றாய்வாளர்களின்

ஆய்வொளி என்னும் தூண்டொளி விளக்கம் (Beaconlight), இன்னும் வகுத்துக் காணாத

எல்லைகள் - கால எல்லைகள் உள்ளன!

அமெரிக்காவின் மய நாகரிகம், பெருவிய நாகரிகம் - தென் ஆபிரிக்க நாகரிகம்-தென் கடலக நாகரிகம் - ஆகிய நாகரிகங்கள், ன்னும் வரலாறு காலம் வகுத்துக் காணாத மாண்ட நாகரிகங்கள் ஆகும்.

இதுமட்டுமன்று; சீன நாகரிகம், உண்மையான இந்திய நாகரிகம்; அதாவது தமிழ் -தென்கிழக்காசிய, நாகரிகம் கியவையும், வரலாற்றாய்வாளர்களின் கால வகுப்புக்கு - கால