புதியதோர் உலகம் செய்வோம்
275
மூன்றாவது - தேசியப் பேரியக்கம்; இது கி. பி. 12ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே தொடங்கி, இன்றும் இயங்கி வருகிறது!
பாரத மாநிலத்தின் முப்பேரியக்கங்களில் முதலாவதான தொல் பழங்காலப் பகுத்தறிவுப் பேரியக்கம், நாகரிக உலகிலேயே - பாரதப் பெருநாட்டின் மக்கள் வாழ்விலேயே முதன்முதல் இயக்கமும், மிகப் பழமை வாய்ந்த இயக்கமும் ஆகும்.
ஆனால் அதேசமயம், தமிழகத்திலே - புதிய தமிழகத்தின் தந்தையாகிய பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் திராவிடப் பேரியக்கத்துடன், அது பலவகை ஒருமைப்பாடுகள் உடையதாய் அவ்வியக்கத்தின் ஒரு தொல்பழங்கால முன்னோடியாய் அமைந்திருந்தது என்னலாம்.
-
தொல்பழங்காலப் பகுத்தறிவியக்கத்தின் முழு வரலாறோ அதன் பழம்பெரும் தலைவர்கள் வரலாறோ அதன் தொடக்கநிலை வளர்ச்சி வரலாறோ - நமக்கு இன்னும் தெளிவான உருவில் வந்து எட்டவில்லை; ஆயினும், இவை பற்றிய சில நிழற்கோடுகள் மூலம் வருங்காலத் திராவிட இயக்க அறிஞர்கள், அதை ஆய்ந்து உருப்படுத்திக் காட்டமுடியும் என்று கட்டாயமாகக் கூறலாம்.
இது எப்படியாயினும், அப்பேரியக்கத்தின் கருத்துப் படிவப் பதிவுகளாக நமக்குத் தமிழில் சங்க இலக்கியமும், பழைய சமக்கிருதத்தில் (அதாவது கீர்வாண மொழியில்) உபநிடதங்களும், இவற்றின் பிற்கால மலர்ச்சிகளாக - இடைக்காலச் சமக்கிருதத்தில் பகுத்தறிவுத் தத்துவ முறைகளாக - சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிசம், பூர்வமீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை என்ற ஆறு காட்சிகள் (தரிசனங்கள்), தமிழகத்தில் அவற்றின் மூல வடிவான வைணவ - சைவ ஆகமங்கள் அதாவது, சித்தாந்த நூல்கள், ஆகியவையும் கிட்டியுள்ளன!
தமிழகத்தில் நம்காலப் பகுத்தறிவு இயக்கத்துக்கு முதல்வர்களாகத் தந்தை பெரியார் - டாக்டர் அறிஞர் அண்ணா - டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் விளங்கி வந்துள்ளது போலவே, இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே, ‘நாத்திக முதல்வர்' என்று தனிப்பெரும் புகழுடன்