புதியதோர் உலகம் செய்வோம்
279
இவ்விரு கருத்துக்களின் தடங்களையும் நாம், சங்க இலக்கி யத்திலும், சங்க காலத் தமிழக வரலாற்றிலும் காணலாம்.
-
-
இமய வரம்பன் சேரலாதன் கரிகால் சோழன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகிய மூவரசரும், அவர்கள் மரபினரும், வில் - புலி - கயல் என்ற முத்தமிழ்க் கொடிகளையும் இமய உச்சியில் கொண்டு பொறித்தனர்!
அத்துடன் நில்லாது, நிலந்தருதிருவிற் பாண்டியனும், கரிகால் சோழனும், அவர்கள் வழிவந்த இடைக்கால - பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும், இலங்கையையும் கடல்கடந்த நாடுகளான கடாரம் முதலிய தென்கிழக்காசிய மண்டலங் களையும் வென்றாள முயன்றனர் - வென்றாண்டனர்!
கி.
மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சீனாவின் ஹான் மரபுப் பேரரசர், திபெத்து, பர்மா உள்ளடங்கலாகக் கிழக்காசியா முழுவதும் வென்று பெரும் பேரரசாட்சி நிறுவினர். கரிகாலன் சோழன் ஒருவனே இந்நிலை கண்டு வெகுண்டு, இமயமும் தாண்டி, அதன் வடபாலுள்ள மேருமலை அல்லது கயிலை மலையைப் புதிய இந்தியத் தேசியத்தின் எல்லையாக்கி, அதன் பின்புறம் அதாவது வடபுறமாகிய சீனப் புறத்திலேயே முத்தமிழ்க் கொடி பொறித்தான்.
தென்னாடாண்ட சிவபெருமானைத் தமிழர், கயிலைக்கு றைவனாகக் கண்டது - கரிகாலனின் இந்தத் திபெத்து வெற்றியின் பயனாகவே இருந்திருக்கக்கூடும்.
இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு, ஒரு மொழி (அதாவது தமிழ் மொழி) வைத்தாள வேண்டுமென்று கருதியவர்களும், 'உலகின் பழங்காலப் பிற வல்லரசுகளை எதிர்த்து இந்தியாவையே உலகின் முதன்மை வல்லரசாக்க வேண்டும்' என்று முயன்றவர்களும் தமிழர்களே -என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது!
இந்தியாவில் தில்லி மாநகர் வரையுள்ள வடமேற்குப் பகுதியை வென்று ஆண்ட குசாணப் பேரரசன் கனிட்கனையும் - அவன் தோழன் விசயாலயனையும் ஆந்திரப் பேரரசர் தோழமையுடன் முறியடித்த பெருமை தமிழக இந்தியப் பேரரசன் சேரன் செங்குட்டுவனுக்கே உரியது!