பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஏ. வரலாறு காணாத காலம் முதற்கொண்டு கடலாண்ட பேரினம் - தமிழனமே!

கடலோடும் பெரியார்!

அலைகடல் தாவும் அண்ணா!

மூடநம்பிக்கைகளாகிய திமிங்கிலங்கள் - சாதி வருணாசிர மங்களாகிய நச்சுப் பாம்புகள் நடமாடும் 'தமிழர் வாழ்வுங் என்னும் கடலில், ஆக்கத் திசை நாடி -அறிவு நெறி கண்டு, மாதவக் கலங்களாக நலமாண்டு வளமாண்ட கலங்களாக இயக்கியவர்கள்தான் அவர்கள்! ஆனால், அவர்களின் நினைவுச் சின்னங்கள், தமிழ்க் கடலிலேயே அவ்வாறு வரலாற்றுத் தடங்களாக மிதக்க விடப்பட்டுள்ளன!

தமிழர் வாழ்வில் - பகுத்தறிவுலகின் வாழ்வில் புத்தொளி தோற்றுவித்த பெரியார் பெயராலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது!

-

அவர் புகழ் ஒளியினாலேயே தமிழகத்தின் தமிழரசு ஒளி பரப்புகிறது! ஆம் அவர் புகழ்ப் பெயருடனேயே இனி தமிழகமும் - இந்தியாவும், புதுப்புகழ் நிறுவிப் புதுவளம் பெறும்!

அவர் பெயராலேயே தமிழக அரசு, கடல் வாழ்வில் ஒரு புதிய கொடி உயர்த்தி - புதிய நாவாய் ஓடவிட முனைந்துள்ளது!

தமிழர் உளமாண்டு - தமிழக ஆட்சியில் புது மலர்ச்சியூட்டி - தமிழ்க் கடலாண்டு - கடலலை இடையே தமிழ்ப் புகழ்க் கனவு கண்டுவரும் தமிழ்த் தெய்வமாகிய அறிஞர் அண்ணாவின் பெயராலும், தமிழ்க் கடலாட்சி, புதிய வளமும் பொலிவும் பெற இருக்கிறது!

அறிஞர் அண்ணா பெயராலும் தமிழக அரசு, கடல்மீது ஒரு புதிய நாவாயினை ஓடவிட முன்வந்துள்ளது!