284
அப்பாத்துரையம் - 4
இந்தியாவின் விடுதலையை மட்டுமல்ல - இந்தியாவின் தன்மானத்தையும் குறிக்கொண்ட விடுதலை மாவீரர்தாம் - கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார்!
இந்தியத் தேசியத்தில் அவர் பங்கு, கதிரவனின் பங்கு - அரிமாவின் பங்கு ஆகும்!
அவர் கப்பலோட்டிய தமிழர் மட்டுமல்லர்; அடிமை இந்தியாவில் விடுதலைப் போராட்டக் கால இந்தியாவில், முதல் முதல் கப்பலோட்டிய இந்தியர் - பிரிட்டனின் ஏகாதிபத்தியக் கடலாட்சியை எதிர்க்க முனைந்த முதல் இந்தியரும், ஒரே இந்தியரும் அவரே!
'கப்பலோட்டிய இந்தியர்' என்று கூறாமல், செக்கிழுத்த சிதம்பரனாரை நாம், 'கப்பலோட்டிய தமிழர்' என்று மட்டும் கூறுவதன் காரணம், விடுதலைப் போராட்டத்தின் பெயரால் ஆதாய அறுவடை செய்ய முனைந்துள்ள மற்ற இயக்கத்தார் நிலையாக மறக்கடித்து இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதே ஆகும்!
அவரை
-
-
'இந்திய விடுதலை இயங்க வரலாறு' என்ற பெயரால், ஆயிரம் மூவாயிரம் பக்கங்கள் கொண்டதொரு மாபாரத ஏடே இயற்றியவர் பட்டாபி சீதாராமையா! அந்த மூவாயிரம் பக்கங்களிலும், கப்பலோட்டிய இந்திய மாவீரரான வ. உ. சிதம்பரனார் பற்றி - வேறு எந்த விடுதலை இயக்கத் தலைவரும் அடைந்திராத அளவில் நீண்ட மாபெரும் தண்டனை பெற்று - செக்கிழுத்துச் சிறைப்பட்டுக் கடுந்தவமாற்றிய அம்மாபெருந் தலைவர் பற்றி ஓரிரு வரிகள் -ஓரிரு சொற்கள் கூடக் கிடையாது! இதுமட்டுமோ இந்திய நாட்டாண்மைக் கழகம் (காங்கிரசு) ஆண்டு தோறும் நடத்திய மாநாடுகளில், யார் யாரெல்லாமோ தலைமை வகித்தது உண்டு; மீண்டும் மீண்டும் தலைமை வகித்தது உண்டு.
-
புதிய இந்தியாவின் தந்தையான காந்தியடிகள், ஒரு தடவை மட்டுந்தான் தலைவர் புதிய இந்தியாவின் தந்தையின் தந்தையரான திலகர் பெருமான், பாஞ்சாலச் சிங்கம் லஜபதிராய் போன்ற மாவீரத் தியாகிகளோ, புதிய இந்தியாவின்
ய