2. தமிழகத்தின் அரசியல் விழிப்பு!
அரசியல் விழிப்பு என்பது எல்லா நாட்டிலும் நடுத்தர வகுப்பின் வாழ்க்கை ஆர்வங்களையும் பொறுத்தது. நடுத்தர வகுப்பின் தனி உரிமை, தனி வாய்ப்பு இது பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கு உழைப்பு என்னும் உழுவல் செல்வம் உண்டு; அதனை வளர்க்க இரு சாதனங்கள் வேண்டும். ஒன்று உழைப்பாற்றலை வளர்க்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகள். இம்மூன்றிலும் உடை, உறைவிடம் முதலியவை ஏனைய கல்வி வசதிகளும் உடலை மட்டுமன்றி உளத்தையும் அறிவையும் வளர்க்கும் இவ்வாய்ப்புக்கள் உழைப்பாளி இனத்துக்குப் போதிய அளவில் கிடையாததால், அவர்கள் கல்வி மொழியறிவு, அறிவுத் துறைகள், கலைகள் ஆகிய வாய்ப்புக்களில் போதிய பங்கு கொள்ள முடியாமல் போகிறது. உயர்தர வகுப்பாகிய முதலாளி னமோ இவ்வளவு வசதிகளிலிருந்தும் உழைப்பு என்னும் இயற்கைச் செல்வத்தைப் பழித்த காரணத்தாலும், சுரண்டல் மூலம் மனித நாகரீகத்துக்கு முட்டுக்கட்டை போடும் காரணத்தாலும், மனித குலத்தின் அழகுப் பொம்மைகளாக, ஒய்யாரமான நோய் வீக்கங்களாக விளங்குகின்றனர். நடுத்தர வகுப்பு உழைப்பினத்திலிருந்து தோன்றிய உயர் வகுப்பின் தீமையுள் சிக்காதிருக்கும் காரணத்தாலேயே மனிதரின் நாகரீகம் வளர்க்கும் பண்ணையாய் இயங்கு கிறது. உழைப்பினம் வேர், முதலாளியினம் வளர்ச்சி குன்றிப் போனபட்ட பகுதி, நடுத்தர வகுப்பே இலை, தழை, பூ, காயாக மர உருவத்தில் காட்சியளிப்பது.
உலகில் முதல் முதல் நடுத்தர வகுப்புத் தோன்றிய இனம் திராவிட அதாவது முற்பெரும் தமிழினம்; முதல் முதல் வீடும், தெருவும், நாடும் குடியும், மொழியும் கலையும், இலக்கியமும் ஆட்சிப் பிரிவுகளும் சட்டங்களும் வகுத்த நாடு தமிழ்நாடு கடல் வாணிகமும் கடற்படை யாட்சியும்; திட்டமிட்ட நாடு நகர