பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




286

அப்பாத்துரையம் - 4

மரபில் வந்த தமிழக அரசே ஏற்று - அதைத் தமிழக அரசின் புகழாகவே ஆக்கியுள்ளது!

வ. உ சிதம்பரனாரின் மாதவத்தின் சின்னமான செக்கினையே தமிழர் கண்முன் தமிழக அரசு, தேசியச் சின்னமாக வைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடமாட்டோம் மறந்துவிடக் கூடாது!

தமிழக அரசின் நாவாய்ப் பணி, ஒரு கட்சிப் பணியன்று ஓர் அரசின் பணிகூட அன்று - அது, விடுதலைப் பேரியக்கத்தின் உள்ளார்ந்த ஓர் உயிரலையிலிருந்து, புதிய இந்தியாவின் தந்தையின் தந்தை - மூதாதையாகிய வ. உ. சிதம்பரனாரின் கப்பல் இயக்கத்திலிந்து தளிர்த்த ஒரு மாபெருந் தேசிய மரபின் புதுமலர்க் கொழுந்தே ஆகும்!

-

இதுமட்டுமன்று; இந்த மாத்தமிழன் இயக்கத்துக்கும் - மாத்தமிழரசின் கடற்பணிப் பண்புக்கும் மூலப் பண்டாரமான தேசிய மரபு, உலக வரலாற்றில்- இந்திய வரலாற்றில் தமிழிந்தி யாவின் தொல்பெரும் பழமையில் ஆழ்ந்த நெடுநீள - அகல வேரோட விட்ட ஒரு மாபெரும் மரபு ஆகும்.

அசோகன், கனிஷ்கன், சந்திரகுப்த விக்கிரமாதித்தன், அர்ஷவர்த்தனன், அலாவுதீன் கில்ஜி, அக்பர், அவுரங்கசீப் ஆகிய இந்தியாவின் பேரரசர்கள் யாவரும் நிலப் பேரரசர்களே - கடற் பேரரசர்கள் அல்லர்!

-

அவர்களிடம் ஆற்றல் சான்ற கடற்படை இருந்ததில்லை; கடல் கடந்து அவர்கள் - ஆட்சியோ வாணிகமோ - தொழில், கலை, பண்பாட்டு வளங்களோ சென்று உலகில் பரவியதும் இல்லை.

ஏனெனில், அவர்கள் வளர்த்த தேசியம்-புறத்தேசியம்; புறமிருந்து இந்தியாவின் புற எல்லையில் வளர்ந்த தூல தேசியம் மட்டுமே!

ஆனால் இந்தியாவின் வரலாற்றில், இன்னும் தெரியவிடப்படாத அகத் தேசியம் உண்மை இந்தியத் தேசியமாகிய தென்னகத் தேசியம் ஒன்று உண்டு; அதன் சார்பில் வளர்ந்த சேர சோழ - பாண்டிய பல்லவ - ஆந்திர மராட்டியப் பேரரசர்கள் மட்டுமன்றி, தென்காசிப் பாண்டியர்,