288
அப்பாத்துரையம் - 4
புறத் தேசியம் - அகத் தேசியம் என்ற இந்த வேறுபாட்டு நுட்பங்களை நாம் இந்திய வரலாற்றிலே மட்டுமன்று - அகல் உலக வரலாற்றரங்கிலும் காணலாம்!
உலகப் போர்கள் இரண்டிலும் உலகையே கிடுகிடுக்க வைத்த செர்மன் வல்லரசு நிலப்படையிலும் - வான் படையிலும் புத்துலக இயந்திர நுட்பங்களிலும் நிகரற்றதாகத்தான் விளங்கிற்று!
ஆனால்,
கடற்படையாற்றலில் மிகக் குறைந்த வலிமையுடைய நில வல்லரசாக இருந்தனாலேயே அது இறுதியில் மண் கவ்வ நேர்ந்தது!
இதே கதி, 19-ம் நூற்றாண்டிலிருந்த மாவீரன் நெப்போலியனின் பிரெஞ்சுப் பேரரசுக்கும் 1-ம் நூற்றாண்டிலிருந்த ஸ்பானியப் பேரரசுக்கும் கி.பி. முதல் நான்கு நூற்றாண்டுகளிலும் வாழ்ந்து மேலுலகம் முழுவதும் ஆண்ட உரோமப் பேரரசுக்கும் கி.மு. 4- நூற்றாண்டுக்குரிய
அலெக்சாண்டரின் பேரரசுக்கும்கூட இருந்தது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகச் சிறப்புடைய எகிப்திய நாகரிகத்திற்கும் - அதே தொல்பழம் பெருமையுடைய சீன நாகரிகத்துக்கும் கூட, இதே குறை, முற்றிலும் இல்லாமல் ல்லை என்பதை ஆய்வாளர் அறிவர்!
உலகின் புறத்தேசிய வாழ்வு இது; ஆனால், தமிழினத் தோடு இசைந்த கடல் வாழ்வுத் தேசியங்களை அகத் தேசியங் களை நாம், உலகெங்கும் - உலக வரலாறு எங்குமே காணலாம்!
-
இவை, தூல தேசியங்கள் அல்ல; தமிழினம் தமிழிந்தியா போன்ற சூக்கும தேசியங்கள் ஆகும்.
பிரிட்டனின் பேரரசு ‘கடற்பேரரசு' என்பதை, அவர்கள் தேசியப் பாடலே காட்டும்.
ஒல்லாந்து நாடு (Holland or the Dutch) சிறு நாடான போதிலும், ஒரு கடல் வாணிக அரசாகவே விளங்கிற்று.
போர்ச்சுகல் நாடு கடலரசாக மட்டுமன்றி, தற்கால ஐரோப்பாவின் முதல் கடற் பேரரசாக உலகளாவிய கடற்பேரரசாகவே விளங்கி வந்துள்ளது!
-