பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

-

1289

பண்டைக்கால நெப்போலியனாக உரோமப் பேரரசை நெடுங்காலம் வாட்டி வதைத்த மாவீரன் ஆனிபலின் கார்த்தசீனியப் பேரரசு-கி. மு. 9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டே நடுநிலக் கடலாண்ட பினிசியக் குடியரசு பண்டைக் கிரேக்க நாட்டின் அதேனியப் பேரரசு கி.மு. 2000ம் ஆண்டுக்கு முற்பட்டே கடலாண்ட கிரேட் தீவினரின் கடலரசு - கீழ் திசையில் இத்தொல் பழங் கடலோடி இனங்களுடனும், தமிழ்ப் பேரினத்துடனும் தொடர்பு கொண்டிருந்த மலேசிய இந்தோனேசியக் கடலோடி இனப்பேரரசுகள் - ஆகியவை, உலகின் இடையறாக் கடல் வாழ்வு மரபின் - அகத் தேசியத்தின் கருவூலங்கள் ஆகும்!

இந்தியாவிலும், உலகிலும் உள்ள இதே வகை வேறுபாடு, புறத்தேசியம் அல்லது போலித் தேசியம்-அகத் தேசியம் அல்லது மெய்யான தேசியம் என்ற வேறுபாடு, இலங்கையிலும் உண்டு! அங்கும், அயலாட்சிக் காலச் சின்னமாகவே இன்னும் விளங்கும் பள்ளி பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்படும் வரலாறு, புறத் தேசியம் மட்டுமே கண்டுள்ளது - அகத் தேசியம் காணவில்லை!

-

கல்லூரி

-

-

சேர சோழ பாண்டியர் தமிழ் மூவரசர்; தமிழகத்தின் வரலாறு, பெரிதும், இவர்கள் உடன் பிறப்புப் பூசல்களாகவே இருந்து வந்துள்ளது என்பதைப் பலரும் அறிவர்; ஆனால், இம் மூவரசருடன் நாலாம் ஐந்தாம் அரசாகவே, ஈழத்தரசுகள் கடார, தென்கிழக்காசிய அரசுகள் ஒருபுறமும், பல்லவ - ஆந்திர - சாளுக்கிய - கலிங்க கங்கை நாட்டு அரசுகள் இன்னொரு புறமும் எப்போதும் தாயாதிச் சண்டைகளில் ஈடுபட்டு, இணங்கியும் பிணங்கியும் - முறுகியும் வாழ்ந்து வந்தன என்பதை, அகல் உலக சிறப்பியல் வரலாறு காட்டும்!

இவ்வரசுகள் அனைத்தும் கடலக அரசுகளே.

இலங்கை - இந்தக் கடலக நாகரிகங்களின் மையமான விளையாட்டு அரங்கம் ஆகும்; அது உண்மையில், தமிழகத்தின் ஒரு கடல்கடந்த அணுக்கப் பதிப்பே ஆகும்!

ஆனால் இலங்கை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள், ஏனோ இதனைக் காணக்கண் பெற்றிருக்கவில்லை!