பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐ. காசினிக்கெல்லாம் கண்ணொளி தந்த கருணாலயம் - எம் தமிழ்!

கண்ணொளி - மக்கள் வாழ்வொளி!

கண்ணிழந்த பேர்க்குக் கண்ணொளி! கண்ணாற்றல் குறைந்த பேர்க்கு இலவசமாகக் கண்ணாடிகள்!

வீடிழந்த பேர்களுக்கு வீடுகள் - வீடமைப்புத் திட்டங்கள்! ஊனமுற்றோர்க்கு உறுதுணைக் கலங்கள் - உறுதுணைப்

பயிற்சிகள்!

கைவண்டி இழுத்தவர்களுக்குக் கால்விசை வண்டிகள்!

தாழ்வுற்றவர்களுக்கு நல்வாழ்வு வாய்ப்புக்கள் பிற்பட்டவர் களுக்கு முற்போக்கு வழங்குவதற்கான துணையுதவிகள்! வை மட்டுமோ?

ஊனக் கண் மட்டும் உடையவர்கட்கு ஞானக் கண் திறக்க வழிகோலும் கல்வி நீரோடைகள்!

வாழ்வோர்க்குப் புது வாழ்வுப் பொங்கல் வளம் தூண்டும் கலை விழாக்கள்! புத்தாக்கம் நாடிப் புத்தூக்கமூட்டும் கலைக் கோட்டங்கள் - காலத்தில் நின்றிலங்கவல்ல சிறப்பு வாய்ந்த வரலாற்றுச் சின்னங்கள்!

பசுமைப் புரட்சியுடன் வாணிகப் புரட்சியும், காட்டுவள தோட்டவளப் புரட்சியுடன் தொழில் வளப் புரட்சியும் கண்டு, பாரதம் போற்றுகிறது- பாரதம் புகழ்கிறது!

இவை, தமிழகத்தில் - தமிழியக்க மரபில் வந்த தமிழாட்சியின் பெருமைகள் மட்டுமல்ல! தமிழகத்தின் தண்ணொளியாம் நம் கருணாவின்... வியனுலகின் விண்ணொளியாம் எம் வான்புகழ் அறிஞர் அண்ணாவின் பெருமைகள் மட்டும்கூட அல்ல!