பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

295

மனித இனத்தின் கண்ணுக்குக் கண்ணாகக் கண்ணொளி அளிப்பது கல்வி; மனித இன நாகரிகத்தின் கல்வியில் கலை இயல் வளர்ச்சியில் தமிழினத்துக்கு - தமிழ் இந்தியாவுக்கு உள்ள பங்கு, பெரிது- பெரிது -மாபெரிது!

அதை வகுத்துக் காண்டல் வேண்டும்!

66

ஆகும்!

“கற்றதனா லாய பயன் என்கொல், வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்?”

கல்வியின் முடிந்த முடிபான பயன், கடவுளை வழிபடுவது

உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் எந்தக் கல்வித்துறை அறிஞரும் கூறாத கருத்து இது!

எந்தச்

-

இதுமட்டுமோ? தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும், சமயவாணரோ பக்தரோ, இதைக் கேட்டு மகிழலாமேயன்றி, இதைக் கூறியதில்லை கூறத் துணியவும் மாட்டார் என்பதில் ஐயமில்லை.

-

னெனில், நில நூலும் கணக்கும் - இயந்திர நூலும் - வரலாறும்- எப்படிக் கடவுளுடன் தொடர்பு கொள்ளக்கூடும்? ஆனால், திருவள்ளுவர் எவ்வாறு இப்படிக் கூற முடிந்தது?

-

திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் மரபு வழிவந்த உண்மையான தமிழ்ப் பத்தருக்கு - கடவுள், மனித வாழ்வின் - மனித இன சமுதாய வாழ்வின் இலக்கு, அறிவிலக்கு - அன்பிலக்கு - சமுதாயத் தொண்டிலக்கு- பண்பிலக்கு - இன இன்ப இலக்கு!

'வாலறிவன்,தூய அறிவுருவனவன்" என்ற அடை மொழியும் - கடவுள் வாழ்த்து குறட்பாக்களில் வழங்கப் பெறும் அடைமொழிகள் இதனைத் தெளிவுப்படுத்துகின்றன!

கல்வியின் இலக்கு கடவுள்; ஏனெனில், அதுவே வாழ்வின்

இலக்கு!

கல்வித்துறை அறிஞர் மட்டுமன்றி, கடவுட் கருத்தை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர் கூடத் திருவள்ளுவரின் இந்தக் கல்வி இலக்கை ஒப்புக்கொள்ள முடியும் என்பது தேற்றம்!