296
அப்பாத்துரையம் – 4
கல்வி பற்றி இக்கருத்தைத் திருவள்ளுவர், கல்வி பற்றிய அதிகாரத்தில் கூறவில்லை. இறை வாழ்த்து அதிகாரத்தில் - அதுவும் இரண்டாவது குறட்பாவிலேயே கூறினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இக்குறட்பா, கல்வியின் குறிக்கோளை மட்டுமே கூறியது என்பதை அதன் அதிகார வைப்பு காட்டுகிறது.
கல்வியின் குறிக்கோள் - வள்ளுவர் வலியுறுத்தல்
கல்வியின் குறிக்கோள், தனி மனிதன் நலமன்று - மனித இன சமுதாய முழுமையின் நலம் என்பதையும், அந்த இனச் சமுதாய வாழ்வு முழுவதும் ஒரு குறிக்கோள் உடையதாதலால், ஒரே முழுநிலை ஒருமைப்பாடு உடையதென்பதையும், திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார்.
-
கல்வி பற்றித் திருவள்ளுவர், ஓர் அதிகாரமன்று கல்வி, கேள்வி கல்லாமை, அறிவுடைமை என நான்கு அதிகாரங்கள் வகுத்துள்ளார்.
இந்த அதிகாரங்கள், அறத்துப்பாலில் கூறப்படவில்லை; பொருட்பாலில் - அதிலும், அரசியலிலேயே கூறப்படுகிறது என்பது காணலாம்.
திருவள்ளுவர், நாட்டின் - அரசின் தேசியக் கடமையாகவே கல்வி நாட்டில் உலகில் ஒரு சிலருக்கோ, ஒரு வகுப்பாருக்கோ, உயர்ந்தோருக்கோ உரியதென்று திருவள்ளுவர் கருதவில்லை!
-
'வாழும் உயிர்க்கெல்லாம்' அது உரியது எனக்கூறி, அதனை மனித இனப் பொதுவுடைமை ஆக்கினார்!
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்!
கல்வி என்பது - மனித இனம் முழுமைக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியது என்று இன்று கருதுபவர்கூட, அதை, கையெழுத்திடும் அளவான அறிவு என்றோ, எழுத்து வாசனை அளவான கல்வி என்றோதான் எண்ணுகின்றனர்; திருவள்ளுவர் கருத்து இதுவன்று:-