புதியதோர் உலகம் செய்வோம்
[299
சங்க இலக்கியப் பாடல்களை இயற்றியவர்களின் பெரும்பாலானவர், ஓரிரு நூற்றாண்டுக்காலத்திற்குள் வாழ்ந்தவரேயாவர்; அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தவருள்ளும், இத்தொகை நூல்களில் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் ஒரு சிலராகவே இருக்க முடியும்.
யவர்களாக-
கம்பரும்,
இந்நிலையிலும், தமிழகத்தில் உச்சநிலைப் புலமையுடை சேக்கிழாரும் அடியொற்றிப் பின்பற்றத்தக்க பெருமையுடையவராக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சங்கப் புலவர்கள் இருந்தனர்.
அவர்களில் மருத்துவர், சோதிடர், புரோகிதர், பல சரக்குக் கடையாளர், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் எல்லாரும் இருந்தனர்.
தமிழகத்திலும், கேரளத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும், இலங்கையிலுமாகக் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலிருந்தும், நகரங்கள் - நகரத்தெருக்கள் ஊர்களிலிருந்தும் புலவர்கள் சங்கத்தில் இடம் பெற்றிருந்தனர்.
-
குறவர் வேடர் - மல்லர் காட்டு மக்கள் அதாவது பேயர், நட்டுவர் முதலிய எல்லா மக்களுமே சங்கப் புலவர்களாய் அமர்ந்திருந்தனர்.
பெண் புலவர்களும் மிகப் பலர், நமக்கு வந்தெட்டியுள்ள முப்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் சங்கப் புலவர்களிலேயே, குறவரும் - வேடரும் பேயரும் - அரச குடியினரும் ஆடல் நங்கையரும் உள்ளனர்!
-
உலகின் எந்த நாட்டின் எந்தக் காலத்திலும் இன்றுகூட - சங்க - இலக்கியம் நிழலிட்டுக் காட்டும் இட வேறுபாடு - வகுப்பு வேறுபாடு தொழில் வேறுபாடு-ஆண், பெண் வேறுபாடற்ற கல்விப் பிரதிநிதித்துவத்தை நாம் காண முடியாது!
மனித உலகின் கல்வியில், தமிழினத்துக்கு உரிய பங்குபற்றிய ஆய்வில், கல்வியின் இன்றியமையாக் கூறுகளான எண்ணும் எழுத்தும் இடம்பெறுபவை ஆகும்.
'எண்என்ப, ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப, வாழும் உயிர்க்கு”