பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(300

அப்பாத்துரையம் - 4

எண் என்பது, இலக்கத்தை - கணக்கையும், எழுத்து என்பது எழுதல் - வாசித்தல் - திறமையையும் குறிப்பதுண்டு; ‘என்ப, ஏனை’ என்ற அடைமொழிகள் மூலம் - திருவள்ளுவர், அறிவு நூல்களுக் கெல்லாம் மூலமான எண்ணையும் அறிவுநூல்களையும், கலைகளுக்கெல்லாம் மூலமான எழுத்தையும், கலைகளையும் கல்வி எனச் சுட்டியுரைத்தார்.

பரிமேலழகர்

வலியுறுத்துகின்றது.

உரையும்,

இக்கருத்தையே

இன்று உலகில் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன; எழுத்தும் இலக்கியமும் உள்ள மொழிகள்; இவற்றுள் ஒரு நூறு மட்டுமேயாகும்.

இந்த நூறிலும்கூட, தனக்கென எழுத்துடைய மொழிகள் தமிழும், தமிழின் மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலியன மட்டுமே!

ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகள் யாவும் அவற்றுக்கு மூலமாகிய இலத்தீன, கிரேக்க மொழிகள்கூட ஏதோ பண்டைப் பண்டைப் பேருலகின் மாண்ட மொழிகளின் எழுத்துக்களைத் தமக்குப் பொதுவாக்கி, தத்தம் தேவைக்கேற்பக் கூட்டியும் - குறைத்தும் கொண்டன! தமக்கென ஒலி எழுத்துக் களை என்றும் வகுத்துக் கொள்ளவே இல்லை!

இவற்றின் நெடுங்கணக்கு வரிசை கூட, உயிர் என்றோ மெய் என்றோ - குறில் நெடில் என்றோ - எத்தகைய ஒழுங்குமின்றி, தலைமுறை தலைமுறையாகக் குருட்டுத்தனமாகப் பின்பற்றிவரப் பெறுபவையேயாகும்.

அரபு, துருக்கி ஸ்லாமிய மொழிகளின் நிலையும்

துவே!

சீன, சப்பானிய மொழிகள், பட எழுத்துக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்திக் கொண்டாலும், தமக்கென ஒலி எழுத்துக்களை ஆக்கிக் கொள்ளவில்லை. தமிழிலிருந்து - சமக்கிருதத்திலிருந்து அணிமைக் காலத்தில் மேலையுலகிலிருந்தே அவர்கள், ஒலி எழுத்துப் பெற்றுள்ளனர்.

-