புதியதோர் உலகம் செய்வோம்
-
301
சமக்கிருதம் உட்பட
இந்திய மொழிகளெல்லாம் இந்தியாவின் ஏதோ பண்டைக்கால மாண்ட மொழி ஒன்றின் எழுத்து முறையை இன்றளவும் பொதுவாகக் கொண்டுள்ளன.
-
இந்த எழுத்து முறையும், உயிர் மெய் - குறில் - நெடில் வன்மை- மென்மை, இடைமை - என்ற வரிசை முற்றிலும், ஒலி முறையிலும், வடிவங்களிலும், முற்றிலும் தமிழ் நெடுங் கணக்கையே பின்பற்றியுள்ளது!
இவ்வெல்லா எழுத்துக்களுமே, சிங்கள - பர்மா -பண்டைய ஈரானி முதலியவை உட்பட ஒலிமுறை - உருவ நுட்ப நுணுக்கக் கூறுகளில் கூடத் தமிழை ஒத்தியல்வது நோக்க, இவற்றுக்கு மூலமான மாண்ட மொழிகூடத் தமிழிலிருந்தே எழுத்துக்களை எடுத்துக் கொண்டிருத்தல் கூடும் என்னலாம். மோகஞ்சதரோ காலம் முதல், தமக்கெனப் படஎழுத்தும், உரு எழுத்தும், அசை எழுத்தும், அறிவுக்கு மிகப் பேரளவில் ஒத்த ஒலி எழுத்தும் வகுத்துக் கொண்டவர்கள், தமிழரும் தமிழினத்தவராகிய திராவிடருமே ஆவர்!
-
கண்ணெழுத்து (Shorthand) குறி எழுத்து (Secret Code) ஆகியவை கூடத் தமிழரிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கிலிருந்ததாக அறிகிறோம்.
எண், எழுத்து ஆகிய இரு கண்களில், உலகுக்கு எழுத்து அளித்தவர் தமிழரே என்பது தெளிவு!
இன்று நாம் பயன்படுத்தும் எண் முறை, 'பதின்மான முறை' என்று அறிஞரால் வழங்கப்படுகிறது; இது, பத்து - நூறு ஆயிரம் - எனப் பத்துப் பத்தாக ஏறிச் செல்லும் தான ஏற்றத்தைக் கொண்டது!
நம் பள்ளி கல்லூரிகளில் - உலக இலக்க முறையை நாம், 'ஆங்கில எண்' என்று கூறி வந்ததுண்டு; ஆனால், மேலை நாட்டினர் இதனை, 'அரபு இலக்கம்' என்றே அணிமைவரை வழங்கினர்.
ஸ்பெயினில் இசுலாமியர் ஆட்சி செலுத்தியபோது, பல்கலைக் கழக முறையையும், விஞ்ஞானங்களையும், ஐரோப்பியர் அவர்களிடமிருந்து பெற்றதுபோல் - இந்த இலக்க முறையையும் நானூறு ஐந்நூறு ஆண்டுகட்கு முன் பெற்றனர்!