306)
அப்பாத்துரையம் - 4
தாய்மொழிகளின் இலக்கியத்திலேயே - அதன் பைந்தடங்கள் ன்றுவரை நிலவும்படி பொறித்துவிட முடிந்தது!
நகரிலும் நாட்டிலும் - வாழ்விலும் உணவிலும் வீட்டிலும் ஏட்டிலும் தமிழர் வகுத்துள்ள திட்டப்பண்பு வியப்பிற்குரியது!
-
காற்றில்கூட நாம், இந்த வகுப்பு முறையைக் காணலாம்!
தெற்கிருந்து வீசும் காற்று - தென்றல்!
வடக்கிருந்து வீசும் காற்று - வாடை!
கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்!
மேற்கிருந்து வீசும் காற்று - கோடை!
நான்கு திசைகளிலிருந்து வரும் காற்றுக்குத் தமிழர், இவ்வாறு நான்கு தனித்தனிப் பெயர்கள் வழங்கினர் - தனித்தனிப் பண்புகளும் கண்டு வகுத்தனர்!
மென்மை - மென்குளிர் வெதுவெதுப்பு - சிலுசிலுப்பு
-
-
ஆகிய பண்புகளை உடையது தென்றல்! இனிமையும் காதலும் - இளமையும் அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
-
பண்பில் ஓரளவு தென்றலை ஒத்தது
-
காண்டல்!
மட்டான குளிர்- மட்டான வெப்பு - மட்டான மழை - ஆகிய பண்புகளை உடையது அது! கட்டிளமையும் மணவாழ்வும், அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
கடுமை - கடுங்குளிர் - வறட்சி ஆகியவை, வாடையின் இயல்புகள்; அது, இனிமையுடையதன்று; ஆயினும் அது, வாட்டி வலிமை தருவது!
முதுமை - முதுமையின் விளைவாய் வரும் முதுக்குறைவு; அதாவது, பட்டறிவு - சாவு!
சாவின் பயனாய் வரும் நிலையாமை-உணர்வு ஆகியவை, அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
பண்பில் ஓரளவு வாடையை ஒத்தது, கோடை; கடுவெப்பு, கடுமழை அதன் இயல்புகள்; முதுமை - நோய் - சாவு ஆகிய புறப்பண்புகளை எதிர்த்து நிற்கவல்ல அகத்தெழு பண்பாகிய உள்ளுயிர்ப்பாற்றலே அது தரும் வாழ்க்கைப் பண்பு, பொதுவாக