பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

307

உலகெங்கணும் - சிறப்பாக இந்தியா, தென்கிழக்காசியா முழுவதும் பரவியுள்ளது!

இது வெறும் காற்றுப் பண்பு - திசைப் பண்பு அன்று! ஓர் உயிர்ப்பண்பு மரபே, தமிழ்த் தேசிய மரபே ஆகும்! ஏனெனில், காற்றின் திசைகள் உலகில் நாட்டுக்கு நாடு - இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், இப்பண்பு மரபு சிறுசிறு மாறுதல்களுடன் - ஆகும்; தமிழர் இதனையே, 'நோன்பு - தவம்' என்றனர்!

தமிழர் வகுத்த இந்தத் தென்றல் - வாடை, கொண்டல் கோடைப் பாகுபாடு, எங்கும் அடிப்படை அமைதி மாறாமல் ஒருபடித்தாகவே பரவியுள்ளது!

எடுத்துக்காட்டாக, உலகக் கோளத்தின் வட கோடியிலும் -தென்கோடியிலும், நிலப்பரப்புகளும் - கடல்நீர்ப் பரப்புகளும், வானும், எல்லாம் ஒரே பனிப் பாலையாகவே இயங்குகின்றன!

ரு கோடிகளிலுமே எல்லாக் காற்றுகளும் அவை எத்திசையிலிருந்து வீசினாலும் - பண்பில், வாடைக் காற்றுகளே - பனிச் சூறாவளிகளே!

தவிர, உலகின் வட பாதி மண்டலத்தின் தான், தென்றல் தெற்கிருந்து- வாடை வடக்கிருந்து வீசும்! தென்பாதி மண்டலத்திலே - ஆஸ்திரேலியாவிலே தென்றல், வடக்கிருந்து தான் வீசும்! வாடைதான் தெற்கிருந்து வீசும்!

-

கிழக்கிந்தியாவுக்கும்

கோடை

மேலும், தமிழகத்துக்கும் சீனத்துக்கும்தான், கொண்டல் கிழக்கிருந்து மேற்கிருந்து வீசும்!

-

-

-

கேரளத்துக்கும் மேற்கிந்தியாவுக்கும் - பர்மாவுக்கும் கிரீசுக்கும்- மேலை ஐரோப்பாவுக்கும் கொண்டல், மேற்கிருந்துதான் வீசும்! கோடைதான் கிழக்கிருந்து வீசும்!

உலகிலே, திசையுடன் பண்பு பிறழ்வதை இன்னொரு வகையிலும் காணலாம்.

தமிழகத்துக்குக் கிழக்கே - கடற்கரை, தாழ்வான நிலம்! இதனாலேயே தமிழர், அத்திசையை, 'கீழ்த்திசை - கிழக்கு' என்றனர்.