(310
அப்பாத்துரையம் - 4
காலத்துடனும், தென்றலுக்கும் - காதலுக்கும் இறைவனாகக் கொள்ளப்படும் மன்மதனுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு!
இத்தொடர்புகளைச் சமக்கிருத மொழியே - சமக்கிருத லக்கிய மரபே - மிகப் பழங்காலச் சமக்கிருத மாக்கவிஞனான காளிதாசனின் சொல்லாட்சிகளே நமக்கு விளக்கிக்
காட்டுவனவாயுள்ளன!
மலையம் அல்லது மலயம் - இது, தமிழரின் திருமலையாகிய தமிழகப் பொதிய மலையின் சமக்கிருதப் பெயர்!
மலையவாதம், 'மலயத்திலிருந்து பிறந்து வீசும் காற்று' என்பதே சமக்கிருத வழக்காற்றில் தென்றலுக்குரிய பெயர்!
மலயானிலம்
மலயமாருதம்
-
-
மலயபவனன் மலயம் எனவும், சமக்கிருத மொழியிலும், வங்காளி - இந்தி - மராத்தி - குசராத்தி முதலிய பல்வேறு இந்தியத்தாய் மொழிகளிலும் இத் தென்றற் காற்று இன்றளவும் பாடல்களில் - நாடகங்களில் திரைப்படப் பாடல்களில் வழங்கப் பெறுகிறது!
'மலயராசன்' என்பது, தென்றலுக்கும், காதலுக்கும் இறைவனாகிய மன்மதன் அல்லது வசந்தனுக்குரிய சமக்கிருதப் பெயர். தென்றலே அவனுக்குரிய ஊர்தி அல்லது வாகனம் என்பது தமிழகத்தின், இந்தியாவின் கவிதை மரபு ஆகும்.
ய
மலயசம் (மலய மலையில் அதாவது பொதிய மலையில் பிறப்பது) என்பதே சந்தனத்திற்குரிய சமக்கிருதப் பெயர் ஆகும். வங்காள இலக்கிய மலர்ச்சிக்கும், இந்திய விடுதலை இயக்கத்திற்கும் ஓர் எழுஞாயிறாக விளங்கிய பங்கிம் சந்திரரின் பாரத மாதா வார்த்தாகிய வந்தேமாதர கீதத்தில், அவர், பாரத அன்னையைச் சந்தனத்தின் குளிர் நறுமணமுடையாள் (மலையச் சீதளாம்) என்று ச்சொல்லை ஆண்ட வண்ணமே குறிப்பிட்டுள்ளது காணலாம்.
இந்தத் தென்றல் மரபுகள், சமக்கிருத மொழி மரபுகளான பின்புதான், உலக மாக்கவிஞன் காளிதாசன், அதைத் தன் மரபாகக் கையாண்டானோ அல்லது அம்மாக்கவிஞன் கையாண்டதனால் தான் அவை சமக்கிருத மொழியில் - தமிழ் மரபின் சின்னங்களாக இடம் பெற்றனவோ - இதை நம்மால் இன்னும் அறுதியிட்டு முடிவாகக் கூற முடியவில்லை.
-