பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

313

இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும்- தென்கிழக்காசியாவிலும் காணப்படுவது உண்டு.

தமிழர் நாகரிகத்தின் அகல் உலக விரிவகற்சியின் பயனாக ஏற்பட்ட பண்புகளே இவை!

'மலயம்' என்ற மலைப் பெயரும், இதுபோலவே, ஆப்பிரிக்காவிலும்-தென்கிழக்காசியாவிலும், இந்தியாவிலேயே வட மேற்கு வடகிழக்குப் பாரிகளிலும் காணப்படுகிறது.

இதனால், தமிழர் பழமைக்குரிய பல வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ச்சியாளர் சிலர், பிற இடங்களில் சென்று தேட நேர்ந்ததுண்டு - நேர்வதுண்டு.

ஆனால்

வைக்கவில்லை!

கவிஞன்

காளிதாசன், இதற்கு டம்

ஆசிரியர் மறைமலையடிகள் விளக்கிக் காட்டுகிறபடி - காளிதாசன் நில நூலும், இயல் நூலும் வழாது, சங்க இலக்கியப் புலவர்களைப் போலவே, கூறுவதைத் தெளிவுபட வாய்மை தவறாது - திட்ப நுட்பமாக எடுத்துரைக்கும் இயல்புடையவன்!

-

-

-

இதனால், மலயமலை விந்தியத்துக்குத் தெற்கே -கிட்கிந்தை (மைசூர்) நாட்டுக்கும் இலங்கைக்கும் நடுவே உள்ளது என்பதையும், சந்தன மரங்களும் அகில் மரங்களும் யானைகளும் நிரம்பியது என்பதையும், காளிதாசன், ஐயத்துக்கு இடமில்லாது விளக்கிச் சென்றுள்ளான்.

இன்றும் பொதிகை மலைக்குத் தெற்கிலுள்ள மகேந்திரகிரி மலையிலும், வடபாலுள்ள ஆனைமலை நீலகிரி ஆகியவற்றிலும், யானைகளும் - சந்தன மரங்களும் மிகுதி என்பதை நில நூல் வல்லார் அறிவர்!

தமிழர் தென்றற் பண்பின் விசயம், கவிஞன் காளிதாச னுடனோ சமக்கிருதத்துடனோ -இந்தியத் தாய்மொழி களுடனோ நின்றுவிட வில்லை! தென்கிழக்காசியா முழுவதும் - அதாவது, இந்தியா கடந்து இலங்கை - பர்மா - தாய்லாந்து கம்போடியா - லாவோஸ் வியட்னாம்- மலேசியா ஆகிய தலைநிலப் பகுதி களிலும், சிங்கப்பூர் - சுமாத்ரா மதுரைத் தீவு - பாலித் தீவு - செலிபிஸ் - மொலுக்காஸ் - பிலிப்பைன்ஸ் ஆகிய

-