3. தமிழ் வளர்ச்சியும் தமிழரின் இயக்கமும்
தமிழ், தமிழர், தமிழினம் என்ற குரல்கள் தமிழ் நாட்டி லெழுந்து முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவற்றுள் முதல் குரலும் முதன்மையான குரலும் தமிழ்க் குரலே. ஆனால் இக்குரல் முதல் முதலாக எழுந்தது 'தமிழ் நாட்'டிலன்று; அதாவது இன்று நாம் ‘தமிழ்நாடு' என்று குறிப்பிடும் ‘குணகடல், குமரி, குடகம், வேங்கடம்' எனும் நான்கெல்லையுட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியாகிய தமிழ் நாட்டிலன்று! துணைக்கண்டத்திலிருந்து கடற்காலினால் பிரிக்கப்பட்ட பழந்தமிழ்த் தாயகத்தின் பகுதியான இலங்கை அல்லது ஈழநாட்டு யாழ்ப்பாணத் தமிழரிடையேதான் அக்குரல் எழுந்தது. அது மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கத் தமிழகம், மோரீசு, விஜி, ஜமெய்க்கா, கயானா முதலிய தமிழுலகைப் பகுதியெங்கும் பரவிப் பெரும்பான்மைத் தமிழர் வாழும் தமிழ் நாட்டிலும் புத்துணர்ச்சியூட்டிற்று. கடல் கடந்தத் தமிழகம் தந்த இத்தமிழியக்கத்துக்குத் தமிழ்நாடே தலைமை வகித்து வழிகாட்ட வேண்டுமென்று தமிழுலகம் எதிர்பார்ப்பது இயல் பேயன்றோ? இவ்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது என்பதில் தடையில்லை. தமிழ்க்குரலால் எழுப்பப் பெற்ற தமிழியக்கம் தமிழ் நாட்டில் இன்று தமிழரியக்கமாய், எழுப்பப்பெற்ற தமிழியக்கம் தமிழ் நாட்டில் இன்று தமிழரியக்கமாய், தமிழின (திராவிட) இயக்கமாய் வளர்ந்து வருகிறது.
தமிழர் குரல் தமிழியக்கமாக, அதாவது மொழியியக்கமாக நிலைபெற்றால் போதும் என்று விரும்புபவர் உண்டு. அது தமிழரியக்கமாக, அதாவது அரசியலியக்கமாக அமைந்து விட்டால் போதும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆயினும் அது படிப்படியாக (தேசீய) இயக்கமாகவும், இன நாகரிக இயக்கமாகவும், இனக்கலை இயக்கமாகவும் வளர்ந்து கொண்டு