பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(320

ஆம்!

அப்பாத்துரையம் - 4

ஆயினும், திராவிட இயக்கம் இத்தடைகளால் குன்றிவிட வில்லை! குன்றின் மேலிட்ட விளக்கம்போல் - அண்ணாமலைத் தீபம்போல் - ஒளிவீசித் திகழ்கின்றது!

66

ஊனக் கண்களை மறைத்து விட முயன்ற இத்தடைகளே மக்கள் ஞானக் கண்களைத் திறந்துவிட்டன” என்பது, நம் காலத் தமிழகத்தின் வரலாறு!

-

திராவிட இயக்கத்தை - தமிழ்ப் பண்பாட்டை - பாரதப் பண்பை அறியாதவர் இன்னும் ன்னும் சில தொலை உயர் வட்டாரங்களின் மூலை முடுக்குகளில் உண்டென்றால், அதற்குக் காரணம், அவர்கள் இன்னும், ‘பாரத நாட்டின் - தமிழகத்தின் வரலாற்றை - ஆரிய மாயையால் பாரதம் வீழ்ந்த வகையை - தமிழகம் தாழ்ந்த வகையைச் சரிவர அறிந்து கொள்ளவில்லை அல்லது அறிய முனையவில்லை' என்பதே ஆகும்.

ஆரிய மாயை என்றால் என்ன?

ஆரிய மாயையினை என்றும் எதிர்த்து நிற்கும் தமிழ்ப் பண்பு - அதனை எதிர்த்தழிக்கத் திட்டமிட்டுப் பாடுபட்டவரும் திராவிட இயக்கம், மதத்தை எதிர்க்கும் ஒரு மத எதிர்ப்பா? ஓர் இனத்தை எதிர்க்கும் இன எதிர்ப்பா? ஒரு சாதியை எதிர்க்கும் சாதி எதிர்ப்பா? எந்த ஒரு நாட்டையேனும் எதிர்க்கும் நாட்டு எதிர்ப்பா?

அல்ல, அல்ல - அல்லவே அல்ல! ஒருக்காலும் அல்ல! முக்காலும் அல்ல!

-

மத

திராவிட இயக்கமும் சரி - தமிழ்ப் பண்பும் சரி வேறுபாடு கடந்த ஒரு மனித இன மதம்; இன வேறுபாடுகள் எவையுமற்ற ஒரு மனித இனக் குறிக்கோட் பண்பு; சாதி வேறு பாடோ, வகுப்பு வேறுபாடோ கருதாத- அவற்றைத் தடம் தெரியாமல் அழித்தொழிக்கத் திட்டமிட்டுள்ள பண்பு இயக்கம் ஆகும்!

திராவிட இயக்கம் எதிர்ப்பது, மதத்தை அன்று - மதச் சுரண்டலை! இனத்தை அன்று இனச் சுரண்டலை! ஒரு சாதியை அன்று - அறிவற்ற, பண்பற்ற நச்சரவச் சாதிச் சுரண்டல் முழுமையையே!