(322)
அப்பாத்துரையம் - 4
கண்கண்ட கடவுளாம் முருகன் - ஆகிய தெய்வ மரபின் புத்துருவாக வருங்காலம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
பெரியார் வடக்குத் திசை ஆதிக்கத்தை எதிர்த்தார்!
ஆனால், இந்தியாவின் தந்தையான காந்தியடிகள் மீதுள்ள பக்தியில் - காந்தியடிகளின் வழியில் தொண்டாற்றியவர்களின் பட்டியலில் அவர், முதல் வரிசையின் முன்னணி முதல்வராக இருக்கவில்லையா?
‘மதுவரக்கனை ஒழியுங்கள்' என்று காந்தியடிகள் கூறிய போது, தமக்குச் சொந்தமான தென்னை - பனை - கமுகு மரங்கள் அத்தனையையும் வெட்டிச் சாய்த்துவிட்ட காந்தியப் பெருமகன் அல்லரோ, அவர்!
தாமும் தம் மனைவியும், தம் அரண்மனைச் சுகபோகங்களைத் துறந்து தோளில் கதர் மூட்டையுடன் தெருத்தெருவாகக் கதர் விற்பனை செய்தவர்கள் வேறு யார்?
ஆரிய மாயையை எதிர்க்கும் திராவிடப் பேரியக்கம் ஒரு மத எதிர்ப்பியக்கம் ஒரு சாதி எதிர்ப்பியக்கம் என்று தெரிந்தோ தெரியாமலோ - நாக்கில் நரம்பின்றிக் கூறுபவர்கள், இவற்றைக் கண் திறந்து பார்க்க வேண்டும்.
திராவிட இயக்கம் பேசும் மாநில சுயாட்சிக் கோட்பாடு, 'தேசத்தின் பிரிவினை நோக்கிச் செல்வது' என்று கூறும் போலி ஒருமைப்பாட்டு வாய் வேதாந்திகள், தம்மைக் கவிந்துள்ள ஆரிய மாயையின் தன்மை உணர்ந்து- அதைக் கிழித்து வெளிவந்து, தமிழக வாழ்வை - இந்தியத் தேசியத்தை ஒரு முழு நலம் வாய்ந்த ஆக்கத் தேசியமாக - பல்வண்ண நவமணித் தேசியமாக- உலக தேசியங்களிடையே ஓர் ஆற்றல் வாய்ந்த அன்பறிவுப் பொங்கு மாவளத் தேசியமாக வளர்க்க முன்வருதல் வேண்டும்!
பகுத்தறிவு இயக்கம் - திராவிட இயக்கம் - இவை இரண்டும் ஒன்றல்ல, வேறு அல்ல!
ஒன்று நிலம் - மற்றது பயிர் வளம்!
பகுத்தறிவு இயக்கம் திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எதிர்மறைப் பகுதி - அறிவுப் பகுதி மட்டுமே; அதற்கு ஆக்கப் பகுதி
-