புதியதோர் உலகம் செய்வோம்
1323
- அன்புப் பகுதி - கலைப் பகுதியும் உண்டு; அதுதான், பொங்கு மாவளப் பகுதி - தமிழ்ப் பண்புப் பகுதி.
இந்த இரண்டும் ஒருங்கே கொண்டதே அண்ணாயிசம் - உண்மையான அண்ணா வழி!
மண்டிக்கிடந்த புதர்க்காட்டை - முட்காட்டை வெட்டி, அதில் பதுங்கிக் கிடந்த நச்சரவங்களை ஒழிக்கப் பாடுபடும் திராவிட இயக்கப் பகுதியே கழகமும், இதனையே மிகுதியாக - முனைப்பாக வலியுறுத்தின!
ஆனால், இது மட்டுமே முழுத் திராவிட இயக்கம் ஆய்விட மாட்டாது; இது, திராவிட இயக்கத்தின் தொடக்கப் பணி மட்டுமே!
பெரியார் வெட்டித் திருத்திய காட்டில், மொழியையும் கலையையும், சமய வாழ்வையும், நாட்டு வாழ்வையும் வளப்படுத்தி, அதைத் தேசிய வாழ்வாக மலர்விக்கும் இயக்க நிறைவுப் பணியை ஆக்கப் பணியைத் தான் திராவிட
முன்னேற்றக் கழகம் செய்கிறது!
கொத்தித் திருத்துவது
உழுது விதைப்பது
களையெடுப்பது - பகுத்தறிவு இயக்கப்பகுதி - திராவிடக் கழகம்!
-
நீர் பாய்ச்சுவது பேணிப் பயிர்செய்து தருவது உணவுப்பொருள் - அதை மக்கள் துய்த்து நல்வாழ்வுபெறச் செய்வது - தேசிய இயக்கப்பகுதி- திராவிட முன்னேற்றக் கழகம்!
L
அறிஞர் அண்ணா வழி வந்த கலைஞர் கருணாவின் தலைமையில் அமைந்த திராவிட இயக்கத் தேசியப் பகுதியில், பகுத்தறிவின் எல்லைக் காவலராக நடமாடும் பல்கலைக் கழகம் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அமைய - தமிழ்க்காவலராகப் பேராசிரியர் அன்பழகன் திகழ ஏனைய தலைவர்கள் நிதிக் காவலராக - உழைப்பு அணிக் காவலராக - கொள்கைப் பயிர் வளர்ப்போராக மக்கள் நலம் காப்போராக விளங்கித் திராவிடப் பகுத்தறிவு இயக்கத்தை ஒரு முழுநல ஆக்கத் தேசியமாக்கி, நாட்டை நாம் ஓங்குவிக்கும் பணியில் முனைந்துள்ளனர்!
-