பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(324

அப்பாத்துரையம் - 4

தேசியம், குடியாட்சி, சமதருமம், பொதுவுடைமை, வாழ்நல அன்பு நல ஆட்சி (Welfare State) ஆகிய எல்லா இயக்கப் பண்புகளின் ஒருங்குநிறை திரட்டுப்பாலே தமிழ்ப் பண்பு - திராவிட இயக்கத்தின் முழுநிறைத் தேசியப் பண்பு!

டிக்

இந்த எல்லாப் பண்புகளையும் அரித்துச் சுரண்டி கெடுக்கும் நச்சுத் திறங்களின் மொத்தத் திரட்டையே 'ஆரியம்' என்றும், ‘ஆரிய மாயை' என்றும், திராவிட இயக்க அறிஞர்கள் அழைக்கின்றனர்!

தேசியத்துக்குப் புற எதிரிகள், அயலாட்சியாளர் - அயல்

மொழியாளர்!

தேசியத்துக்கு சக எதிரிகள், உயர் வகுப்பினர் அயலாட்சியை ஆதரித்து உயர்வு பெற்றவர்கள்!

-

குடியாட்சியின் எதிரிகள், உண்மையில், அகத் தேசிய ஆட்சியின் எதிரிகளே; ஆனால், சாதி மத மொழி ஆதிக்க உருவிலும் தனி உரிமை ஆதிக்க உருவிலும் நின்று, அரசியல் சுதந்தரத் தை ஒரு மாயச் சுதந்தரமாக- சுதந்தர மாயையாக மாற்றியமைத்து, மக்களை மயக்கி ஏமாற்றுகிறார்கள்!

திராவிட இயக்க அறிஞர், அகத் தேசிய எதிரிகளின் ஆதிக்கத்தை, ‘மாயை' என்று குறிப்பிடுவதன் காரணம் இதுவே! சமதருமம் - பொதுவுடைமை ஆகியவற்றின் எதிரிகளும், அகத் தேசிய எதிரிகளே!

இவர்களை, சமதரும்

பொதுவுடைமை இயக்க

அறிஞர்கள், 'முதலாளி வர்க்கம்' என்று அழைக்கின்றனர்!

இவர்கள், அரசியல் சமத்துவத்தையே தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்தி - பொருளாதார ஏற்றத் தாழ்வை மலை போல வளர்த்து - அதில் தாம் முழுப் பயனம் பெற்று மக்கள் வறுமையைப் பெருக்கி - அதையே தம் முதலீடு ஆக்கிவிடுகின்றனர்!

புறத் தேசியங்களின் கண்களிலே இந்த முதலாளி வர்க்கம், சட்டத்தின் உதவி கொண்டே - தேசிய உரிமைகள், குடியாட்சி உரிமைகள் ஆகியவற்றின் துணை கொண்டே- மண்ணைத் தூவி விடுகின்றன!