பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

325

பல இடங்களில், தேசி ஆட்சி என்பதும் - குடியாட்சி என்பதும் இந்தச் சுயநல முதலாளித்துவக் கும்பலின் மாய சூத்திரக் கயிற்றின் ஆட்சியாகவே அமைந்து விடுகின்றன!

திராவிட இயக்க அறிஞர், இவற்றையும் ‘மாயை' எனக் கூறி மக்கள் அறிவுக் கண்ணைத் திறக்க விரும்புவதன் காரணம் இதுவே!

தேசியம், குடியாட்சி, சமதருமம், பொதுவுடைமை என்ற இவ்வெல்லாப் பண்புகளும், உண்மையில் எதிர்மறைத் தேசியப் பண்புகளே ஆகும்; ஏனெனில், இவை, புலிக்கும் - ஆட்டுக்கும், திறமையுடையவனுக்கும் - திறமையற்றவனுக்கும், ஒரே சரிசம உரிமையும்,பாதுகாப்பும் அளிக்கின்றன!

இந்நிலை, உண்மையில் புலிக்கும் உதவும் மாய ஆட்சிதான் அன்றோ?

இந்நிலை கண்ட திராவிட இயக்க அறிஞரும் - திராவிட இயக்க அறிஞரை ஒத்த உலக அறிஞரும் வளர்த்த புதிய பண்புகளே வாழ்நல ஆட்சிப் பண்பு (Welfare State) - ஓர் உலக ஆட்சிப் பண்பு (One World State).

இந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால், தனி மனிதர் முயற்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதில், மனமார உதவி உயர்த்த முன்வருவர்! அத்துடன், நாடு கடந்து, மனித இன நலமே பேணுவர்!

திராவிட இயக்கம், இந்த அகத் தேசியத்தினும் உயரியது; ஏனெனில், அது, தனி மனிதன் அறிவையும் திறமையையும் வளர்ப்பதுடன், அவனை முயற்சியில் ஊக்குவிப்பதுடன் அமைவதில்லை; அவன் முயற்சிக்குப் பின்னணியாக மேற்பட்டதாகச் சமுதாய, நாட்டு, உலக நலத்திட்டங்களை வகுத்து-அவர்கள் விரும்பும் வளங்களை மட்டுமன்றி அவர்களே எதிர் நோக்காத கனவுகூடக் காணாத வளங்களை வலிய

-

வழங்கிவிட முனைவதாகும்!

“நாடு என்ப

நாடா

வளத்தன!”