புதியதோர் உலகம் செய்வோம்
1327
அயல் நாட்டு ஆதிக்கத்தை எதிர் - அயல் நாட்டை அன்று! முடியுமான அளவும், அயல் நாடுகளும் வளம்பெறப் பாடுபடுவதே நல்ல நாட்டின் இலக்கணம் ஆகும்!
யன்று!
முதலாளி வர்க்க ஆதிக்கத்தை எதிர் - முதலாளிகளை
முடியுமான அளவும்
முதலாளிகளையும் திருத்தி மனிதராக்கி - அவர்கள் நலங்களையும் வளர்க்கப் பாடுபடு!
பிராமணீயத்தை - உயர் சாதியத்தை எதிர் - பிராமணரை உயர் சாதியினரை அன்று!
முடியுமான அளவும் தம்மைத்தாமே, 'உயர்ந்தோர்' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளவர்களிடம், சமுதாயப் போதம் மனித இனப் பாசம் வளர்த்து - அவர்களை நன்மனிதர்களாக்கி - அவர்களின் அறிவும், பண்பும், நலமும் வளர்க்கவே பாடுபடு!
ஆதிக்கவாதிகள் ஆதிக்கவாதிகளாகப் பிறப்பதில்லை! அடிமைகளும் அடிமைகளாகப் பிறப்பதில்லை!
-
சுழித்தோடும் வெள்ளத்தில் - தம் செயலற்று முன்னும் சுழன்று மிதப்பவர்கள்போல், 'ஆதிக்க அடிமைநிலை இயல்பானது' என்ற மாயா தத்துவத்தில் அவ்விரு சாராரும் தம் மெய்நலமும் மெய்யறிவும் காணாது உழல்பவரே ஆவர்!
'உயர் சாதியினர்' என்பவர், இன்னும் ன்னும் உயரிய சாதியினருக்கு அடிமைப்பட்டே தம்மினும் தாழ்ந்த சாதியினரின் தலைமீது தாண்டவமாட ஒருப்படுகின்றனர்!
இதுபோல, தாழ்ந்த சாதியினர் எனப்படுபவரும், தம்மினும் தாழ்ந்தவர் தலைமீது மிதித்துத் துவைத்துக் கொண்டேதான் உயர்ந்தோருக்கு அடிமையாகின்றனர்!
இந்நிலை, மாயை அல்லவா?
அறிஞருள் அறிஞர், திராவிட இயக்க அறிஞர்களே! அவர்கள், இந்த மாயா தத்துவம் உணர்ந்தவர்கள்! உணர்ந்தே செயலாற்று பவர்கள்!