ஔ. குடியாட்சியின்
உண்மையான
மக்கட் குடியாட்சியின் மறைதிறவு, உள்ளுயிர்ப் பண்பு யாது?
குருநானக், குரு கோவிந்த சிங் போன்ற பாஞ்சாலச் சிங்கங்களின் மரபில் வந்த பாஞ்சால நாட்டின் சிங்கங்கள் - பாரத நாட்டின் சிங்கங்கள் பல!
“வட இந்தியத் தலைவர்களுக்குள்ளே முதன் முதலாகத் திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டவர்கள் பாஞ்சாலத் தலைவர்களே” என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
பாஞ்சாலம் மட்டுமன்றி, பாரதமே இப்பொழுது தமிழகத்தை வழிகாட்டியாகக் கொண்டுவருகிறது!
வங்க சிங்கம் முசிபுர் ரகுமான்!
காசுமீர சிங்கம் சேக் அப்துல்லா!
விதேகம் கண்டுவரும் அருட்சிங்கம் செயப்பிரகாச
நாராயணர்!
-
தங்கத் தமிழகத்தின் சிங்கக் குருளையாக தென்னகக் காந்தியாம் வான்புகழ் அண்ணாவின் அகிம்சை நெறி, 'வள்ளுவ அன்பு - அருள் நெறி' என்னும் கூட்டுக்குள்ளிருந்து அறப்போர் வழி பயின்ற சேயிளங் குருளையாக டாக்டர் கலைஞர் கருணா திகழ்கிறார்!
-
'உரிமைக்குத் திருமலை உறவுக்கு இமயம்' என்று குரலெழுப்பி நின்று அறப்போராடும் கலைஞரின் உடனுரிமையின் உறவோர்களாக - நடமாடும் பல்கலைக் கழகமாய் நிலவும் நாவலர் நெடுஞ்செழியன்; இனிய தமிழின் எழிலார் திருவுருவமாய் -