பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(330

அப்பாத்துரையம் - 4

மக்களிடையே ஒரு கலை தவழ் கல்லூரியென - தமிழ் நிலா வெறிக்கும் கல்வி நிலையமாக உலவும் பேராசிரியப் பெருந்தகை அன்பழகன்; உரிமை எல்லைக்கும் - உறவின் தொலைவுக்கும் ஒருங்கே கொடியெடுத்து வீறிட்டு முழங்கிய - முழங்கி வரும் வயமான் குரிசிலாகிய சிலம்புச் செல்வம் சிவஞானம்: 'நாம் தமிழர்' என்ற வரலாற்று முழக்கமிட்டு- அதைக் கால ஏட்டில் பொறிக்கப் பங்கையாற்றும் பாரிஸ்டர் பெருமகன் ஆதித்தனர்; அறிஞர் அண்ணாவின் முன்னோடும் பிள்ளையாய் இயன்ற கலைஞர் பெம்மானுக்கும் ஒரு முன்னோடும் பிள்ளையாய் மிளிரும்படி மாவளங் காணும் மாதவன் முதலாக எத்தனை எத்தனையோ தானைத் தலைவர்கள் - அறிவுச் செம்மல்கள், தமிழகத்தின் சிங்கக் குருளை உயர்த்தியுள்ள தங்கக் கொடியைச் சூழ்ந்துநின்று 'உரிமை பிழையாமல் உறவு நெகிழாமல்’ வளர்கின்ற பாரதத்தின் வாழ்வு வளம் பெறுவதற்காக அறம் வழுவா மறப்போர் ஆற்றிவருகின்றனர்!

-

-

ஆம்! கதிரொளி - நிலாவொளி - விண்மீன்களின் சுடர் ஒளிகள் இங்கே!

கதிரொளி சென்று எட்டாத் தொலைவிலும், 'வடமுனை வளரொளி’; ‘நள்ளிரவிலும் நட்டம் பயிலும் அன்றோ?

அதோ - வடபால் வடமுனை வளரொளி, செ.பி.!

‘விதேகம் ஆண்ட உபநிடத முனிராசன் சனகனின் புத்துருவோ' என, அரசியல் வாழ்வு துறந்தும் மக்கள் வாழ்வுப் பணி மறவாத உள்ளத் துறவுடைவோராகிய செயப்பிரகாச ராயணரின் அற வேள்விப் போர், வடபாலும், த்தகைய தென்னகப் போரின் எதிரொலியாக எழுந்துள்ளது!

'அரசியல் முறையிலே குடியாட்சி வெற்றி கண்டால் போதாது, அது மக்கள் வாழ்விலும் வெற்றி காண வேண்டும்!” என்ற தத்துவத்தை செயப்பிரகாசரின் தனிப் பேரியக்கம் காட்டுகிறது!

மாநில சுயாட்சி கோருவது, தமிழ் மாநிலம் மட்டுமல்ல - பாரத மாநிலங்கள் எல்லாமே!

பாரதமே, சுயாட்சியை

-

மக்கள் உரிமைத் தன்னாட்சி

வளத்தைக் கோரத் தொடங்கிவிட்டது!