பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஃ. வருங்கால ஓருலகின் வித்து - தமிழ்! வருங்கால ஓர் உலகின் வேளாண்மை -

-

திராவிடப் பேரியக்கம்!

தமிழ் ஒரு மொழியன்று; புற்றீசல்கள்போல் உலகில் தோன்றித் தோன்றி மறையும் உலக மொழிகளிடையே, அது, என்றும் நின்றும் நிலவும் மொழி!

மற்ற மொழிகளையும், தன்னைப் போலவே என்றும் நின்று நிலவவல்ல மொழிகளாக ஆக்கிவிடும் ஆற்றல் படைத்த மொழி!

-

தமிழ் - ஒரு சமயம்! சமயம் கடந்த வள்ளுவச் சமயத்தை அது கண்டெடுத்து எல்லாச் சமயங்களையும் அச்சமயப் பண்பின் ஆற்றலால் மேம்படுத்தும் திறம் வாய்ந்த மனித இனச் சமயம் அது!

திராவிட இயக்கத்தின் தன்மையும் இதுவே!

திராவிட இயக்கம், தமிழகத்தின்-இந்தியாவின்-உலகின் எண்ணற்ற கட்சிகளில் ஒரு கட்சியன்று; அது, கட்சி கடந்தது - நாடு கடந்தது!

-

தமிழ்ப் பண்பை வள்ளுவப் பண்பைத் தன் பண்பாகக் கொள்வதுடன் அது அமையவில்லை; கட்சி கடந்து எல்லாக் கட்சிகளிலும் - நாடு கடந்து எல்லா நாடுகளிலும் - தமிழ்ப் பண்பை அவ்வம் மொழியாளர்களின் மொழி வளர்க்கும் மொழிப் பண்பாக-எல்லாக் கட்சிகளிலம், நாடுகளிலும் தமிழ்ப் பண்பை அவ்வக் கட்சி - அவ்வந் நாடு வளர்க்கும் நாட்டுப் பண்பாக ஆக்கி- உலகை வளப்படுத்தி - ஓருலகாக்கும் இயக்கமாகவே அது தமிழியக்கத்தில் - தமிழர் வாழ்வில் மெல்லக் கருவுற்றுத் தளிர்த்து வளர்ந்து வந்துள்ளது - வளர்ந்து வருகிறது!

உலகின் பகுத்தறிவு வீரர்களிடையே தலைசிறந்து விளங்கும் தந்தை பெரியாரை முதல்வராகவும் -உலகின் புரட்சிக்