புதியதோர் உலகம் செய்வோம்
341
ஆனால், இன்று உலகில் நிலவும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் பலவும், ஆண்டுக்கணக்கில்தான் வாழ்ந்து வருபவை! பல - ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வாழ்வு
கண்டவை!
உலகின் எந்த மொழியும் - சீனம், சப்பான், தமிழ் நீங்கலாக ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டு மொழி வாழ்வோ, ஆறு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலக்கிய வாழ்வோ கண்டதில்லை என்பதை, மொழி வரலாறு காட்டும்!
சமக்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற இறந்தபட்ட உயர் தனிச் செம்மொழிகளின் மொழி இலக்கிய வாழ்வுகள் கூட, இந்தப் பொது விதிக்கு விலக்கு அன்று!
தமிழ்மொழி, மனித இன நாகரிக வாழ்வுடன் வாழ்வாக மனித இன நாகரிகத்தின் ஒரு வரலாறாக-நம்மிடையே நிலவும் ஒரே உலக மொழி ஆகும்!
உலகின் மற்றெல்லா உயர்தனிச் செம்மொழிகளும் மாண்டு மறைந்துவிட்டன!
தமிழ் ஒன்றே - வாழும் ஒரே உயர் தனிச் செம்மொழியாய் மனித உலகில் நின்று நிலவுகிறது!
மாண்டபினீஷியருடன், ஏபிரேயருடன்-கிரேட் தீவு நாகரிகத்துடன்- எகிப்தியர், சுமேரியர், ஏலமியருடன் உறவு கொண்டு வாழ்ந்த மொழி தமிழ்!
அவர்கள் தோழனாக வாழ்ந்த தமிழ் ஒன்றே சந்ததியற்றுப்போன அவ்வினங்களின் பெயர் சொல்லுவதற்குரிய சந்ததியாகவும் நிலவுகிறது - நிலவும்!
உலக நாகரிகங்கள் அத்தனையிலும் நாம், தமிழ் நாகரிகத்தின் சுவடுகளை தொடர்புத் தடங்களைக் காணலாம்!
உலக மதங்கள் அத்தனையிலும், இதுபோலத் தமிழர் சமயச் சிந்தனையின் உயிர்வரைக் கோடுகளைக் காணலாம்!
துபோலவே, உலக மொழிகள் அத்தனையிலும் நாம், தமிழின் சொற் படிவங்களை - சொற் பண்புக் கோடுகளை கருத்துத் தடங்களைக் காண முடியும்!