பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(342)

அப்பாத்துரையம் - 4

'உலகைப் படைத்த முழு முதல், உலகுடன் உலகின் உள்ளுயிராக இயங்கி - அவ் உலகு சென்றொடுங்கும் இடமாகவும் அசைந்துள்ளது” என்பர் இறை நூலார்!

உலக மொழிகளின் ஒலி இயல்பு சொல் இயல்பு இலக்கண அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்த மொழி இயல் வல்லுநர்கள், எல்லா மொழிகளும், அவ்வியல்புகளில் தமிழ் இயல்புடையவையாகவே பிறந்துள்ளன தமிழ் இயல்பு நோக்கியே மலர்வுற்றுச் செல்கின்றன - என்பதைக் கண்டு வியப்பெய்துகின்றனர்!

-

தமிழின் அடிப்படைப் பொதுமைச் சிறப்பே இவைகள்! அதன் தனிச் சிறப்புக்களோ இன்னும் பலப்பல! தமிழிலக்கிய வரலாற்றுப் பேராற்றின் ஊழிகள் இதனைக் காட்டும்!

தமிழ் இலக்கிய பேராறு - பாய்ந்து பரவிவரும் பேரூழிகளை நாம், மக்கள் ஊழி அல்லது உலக ஊழி -செந்தமிழ் ஊழி அல்லது திராவிட ஊழி - இந்தியத் தேசிய ஊழி - தமிழ்த் தேசிய ஊழி - தற்கால ஊழி என, ஐந்து பெருங்கூறுகளாக வகுத்துக்

காணலாம்!

இவ்வூழிக்குரிய

எந்த

இலக்கியமும் நமக்கு வந்தெட்டவில்லை யானாலும், இவ்வூழியை அடுத்து வந்த தொல்காப்பியம் மூலம் நாம், ‘இவ்வூழிக் காலத்தில் இலக்கிய இலக்கணங்கள் பரவலாக இருந்தன' என்று உணருகிறோம்! தொல்காப்பியம் மூலமே அவைபற்றிய பல பண்புகளையும் நாம் காண்கிறோம்!

உலகில், நாடு மொழி சமயம் ஆகிய வேறுபாடுகள் தோன்றாத கால ஊழியாதலின், இவ்வூழியை நாம், 'உலக ஊழி' என்கிறோம்!

அத்துடன், படித்த வகுப்பார் ஏற்பட்டு, தனி மனிதர் ஏடு இயற்றும் காலமாக இது அமையாததனாலேயே நாம் இதனை, ‘மக்கள் ஊழி' என்கிறோம்!

மக்கள், எழுதப்பட்ட இலக்கியம் அதாவது இயலைவிட- அன்று, நாடகம் - இசை - கதைப் பாடல் - விலங்கு புள் கதைகள் ஆகியவற்றையே பெரிதும் விரும்பினர்; இதனால் நாம், இக் காலத்தை, ‘முத்தமிழ் ஊழி' என்கிறோம்!