பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




344

அப்பாத்துரையம் - 4

இன்றைய உலகம் முழுவதிலும் இம் மரபின் சின்னங்கள் நாம் காண்டல் கூடும்; ஏனெனில் எழுத்தும் ஏடும் உலகில் ஏற்படாத தொல்பழங்கால இலக்கியமே இவை!

தமிழ் இலக்கியப்பேராற்றில் இரண்டாவது பேரூழியே தொல்காப்பியம்- திருக்குறள் - சங்க இலக்கியம் ஆகியவை கண்ட தமிழன் பொற்காலம் ஆகும்!

இக்காலத்தில், எழுத்தறிவு பெருகிப் பரந்து - படித்த வகுப்பு ஒன்று ஏற்பட்டு - தொழில்கள், வாணிகம், சமயம் ஆகியவை வளர்ந்து - இயல், இலக்கியம் ஓங்கி வளர்ந்தது!

நாடகமும்

இசையும், மக்கள்

இலக்கியமும் அழியவில்லையாயினும் இயல் இலக்கிய ஒளியின் பின்னணியில் அவை படிப்படியாக மங்கி மறுகின!

இயலுக்கு அதாவது எழுதப்பட்ட இலக்கியத்துக்கு உரிய திருந்திய தமிழ் ஏற்பட்டு - அதுவே செந்தமிழாக இலங்கிற்று! இக்காலத்தை இதனாலேயே நாம், 'செந்தமிழ் ஊழி' என்று கூறுகிறோம்.

புக்கால இலக்கியத்தை நாம், 'திராவிட ஊழி இலக்கியம்' என்றும் கூறலாம்!

ஏனென்றால், இது, முதலிய ஊழி இலக்கியம்போல உலகம் முழுவதிலும் பரவாவிட்டாலும், மனித இன நாகரிக உலகு முழுவதும் இயங்கிற்று! கடல்வழி மேற்கில் வட ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, மேலை ஆசியா ஆகிய பரப்புகளிலும், கிழக்கில் தென் கிழக்காசியா முழுவதும், உலகின் மறுகோளத்தில் நடு அமெரிக்காவிலும் மூல திராவிடம் (Proto Dravidian) நாகரிகமாக இவ்வூழி இலக்கியம் பரவிற்று!

அத்துடன் அது, தமிழரால் சிறப்பாகப் பழந்தமிழ் இலக்கியம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையிலும் பண்பட்ட திராவிட மொழிகளான மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கும் பொதுவான உரிமை உடையதாகும். இவ்வூழியில் - இவ்வெல்லாப் பரப்பிலும் உள்ள புலவர்கள், இவ்வெல்லாப் பரப்பிலும் உள்ள புரவலர்களையும் இவ்விலக்கியவழி பாடியுள்ளனர்!