346)
அப்பாத்துரையம் - 4
தமிழ் இலக்கியப் பேராற்றின் மூன்றாவது ஊழி, சிலம்பு - மேகலை- சிந்தாமணி போன்ற காவியங்கள் - தேவார திருவாசகம், திருநாலாயிரம் போன்ற சமயப்பத்தி ஏடுகள் - கம்ப இராமாயணம் ஆகியவை, ஒளிவீசிய கால ஊழி ஆகும்!
இந்திய நாகரிகத்தையும், இந்தியத் தேசியத்தையும் உருவாக்கிய இலக்கிய ஊழி இதுவேயாதலால், நாம் இதனை 'இந்தியத் தேசிய ஊழி' என்கிறோம்!
இந்த ஊழி, உண்மையில் செந்தமிழ் ஊழிக்கு முற்பட்ட தொல்காப்பியருக்கு முந்திய ஊழியின் மறுமலர்ச்சியே ஆகும்!
செந்தமிழ் ஊழியில் கிட்டதட்டப் படுத்துவிட்ட தமிழ் சை மரபைப் புதுப்பிப்பதே தம் நோக்கம் எனச் சம்பந்தர், தம் தேவாரம் முழுவதும் பறைசாற்றுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
இரண்டாம் ஊ ஊழியில், தமிழகத்தில் மட்டுமன்றி லகெங்கணுமே சமயங்கள் அரசியல் சார்பும் - புரோகித ஆட்சிச் சார்பும் -பரப்புதல் நோக்கமும் இல்லாத மக்கட் சமயங்கள் அல்லது இயற்சமயங்கள் அல்லது சமுதாயச் சமயங்களாகவே இருந்தன!
உலகில் முதன்முதலாக அரசியல் ஆட்சிச் சமயங்களும், புரோகித ஆட்சிச் சமயங்களும் தோன்றியது
இக்காலத்தில்தான்!
த்தகைய புதுச்சமய அமைப்பினை முதன்முதலில் புத்த சமண சமயங்களும், அதன்பின், சைவ - வைணவச் சமயங்களும் ஏற்றுப் புதுவடிவெடுத்தன!
பிற்கால இந்து மத
கிறித்துவ, இசுலாமிய சமய அமைப்புகளுக்கு இவையே முன்னோடிகள் ஆயின!
சங்க காலத்தில் பெரிதும் அழிவுற்றுப் போய்விட்ட முத்தமிழ் மரபே இக்காலத்தில், கோவை - உலா - பிள்ளைத் தமிழ் ஆகிய சிற்றிலக்கிய வடிவங்களாகவும், மக்களால் பாடப்படத்தக்க பல்லிசை விருத்தப் பாடல்களாகவும் பல்கிப் பெருகத் தொடங்கின!