இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(350
அப்பாத்துரையம் - 4
தமக்கெனத் தல புராணங்கள் - உலாக்கள் - கலம்பகங்கள் - சதகங்கள் - பள்ளு, குறவஞ்சி வகுத்து, தமிழிலக்கிய ஒளியின் நடு மையமாக விளங்காத ஊர்கள் தமிழகத்தில் காணப்படல் அரிது
என்னலாம்.
தமிழக இலக்கியப் பேராற்றின் ஐந்தாம் ஊழி 19-20-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தற்கால ஊழி ஆகும்!
முதல் இரண்டு ஊழிகளில் தனிமரமாக நின்ற தமிழகம், மூன்றாம் - நான்காம் ஊழிகளில் பிற மொழிகளை வளர்த்து - அவற்றுடன் போட்டியிட்டு-நான்காம் ஊழியிலே அவற்றிடையே தன் தனித் தன்மையைப் பெருக்கிக் கொண்டது!
ஐந்தாம் ஊழி, புதுமை ஊ ழி - பகுத்தறிவு ஊ ஊழி மறுமலர்ச்சி ஊழி!
புதுக்கவிதை, அகலக்கதை, சிறுகதை, கட்டுரை முதலிய உலகளாவிய வடிவங்களில் தமிழ், புத்துருவெடுத்தது!
(கழகக்குரல் - 6.41975)