புதியதோர் உலகம் செய்வோம்
13
வேண்டும்.அப்போதுதான் தமிழ் உண்மையிலேயே முதலிடம் வகிக்கும். அப்போதுதான் தமிழராட்சியும் தமிழ்நாட்டாட்சியும் கல்வியாட்சியும் தமிழராட்சியாக, அதாவது தமிழ்ப் புலவர் ஆட்சியாகத் திகழும். தமிழரிடையே அன்று பிறமொழி படிப்பவர், உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர். அன்று பிறமொழி படிப்பவர். உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர் ஆகவே தமிழ்ப் புலவர் உலக அறிவுடையவராகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவர். பிறமொழி பயிலமாட்டாத தொழிலாளர். ஏழைகள் அன்று தமிழிலேயே எளிதாகவும் குறைந்த காலத்திலும் விஞ்ஞானம் கற்பர் தனித் தமிழராகிய இத்தொழிலாளத் தமிழர் விஞ்ஞானத்தில் தம் தமிழ் மரபிலேயே சொல்லாக்குவர். அவர்கள் விஞ்ஞான அறிவும் பள்ளிப் படிப்பாய், வாயாடும் அறிவாய் இராமல், அறிவைத் தாண்டிச் செயலுக்குப் பயன்படும் விஞ்ஞானமாயிருக்கும் தமிழர் தமிழின மொழிகளைக் கற்று மொழியாராய்ச் சியிலும், ஒருசில அயல் மொழிகளுக்கு அனைவரும் கட்டுப்படாமல், விரும்பிய உலக மொழிகளைக் கற்று அந்நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பிலும் முன்னேறுவர் என்பதில் தடையில்லை.
திராவிடன் பொங்கல் மலர் 1953