புதியதோர் உலகம் செய்வோம்
15
முடியாது. ஒருவர் இராசராசனே சிறந்தவன் என்று கூறலாம். இன்னொருவர் இராசேந்திரனே என்பர். வேறு சிலர் குலோத்துங் கனே என்று கூற முனைவர். ஏனென்றால் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புடையவராகவே இருந்தனர். சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் இராசராசன். அவன் வகுத்த ஆட்சி முறையே இன்றளவும் தென்னாட்டின் அடிப்படை ஆட்சி முறையாய் இருக்கிறது. பேரரசின் புகழை உச்ச எல்லைக்குக் கொண்டு சென்றவன் இராசேந்திரன். அந்தக் கோட்டை சரியாமல் காத்து, அதனைச் சூழ்ந்து வாரியடித்த சூறாவளிப் புயல்களை அடக்கி, ஒளி உண்டவன் குலோத்துங்கன்.
குலோத்துங்கன் வாழ்வில் இருபகுதி உண்டு; ஒன்று சோழப்பேரரசு அவன் கைக்குள் வருமுன் உள்ள இளமைப்பகுதி. மற்றது அவன் பேரரசனானபின் உள்ள பகுதி. இவற்றுள் வரலாற்றில் டம் பெற்றபகுதி, இராசராசனுடனும் இராசேந்திரனுடனும் அவனுக்குச் சரிசமப்புகழ் தந்தபகுதி, பிற் பகுதியேயாகும். முற்பகுதி வரலாற்றால் முழுதும் விளக்கப்பட வில்லை. இது இயல்பே. ஏனெனில் அது வரலாறு கடந்த பெருமை உடையது. அது வரலாறாக எழுதப்பட்டால், அது வரலாறாயிராது. தென்னாட்டின் தலைசிறந்த வீரகாவிய மாய்விடும்.
குலோத்துங்கன் தந்தை வழியில் கீழச் சாளுக்கியர் குடியில் வந்தவன். தாய் வழியில் சோழமரபுக்கு உரியவன். அவன் தாய் தஞ்சைப் பெருஞ்சோழனான இராசராசனின் மகளான குந்தவை தந்தையோ வீரபுலிகேசியின் வழியில் வந்த விசயாதித்தியன் கீழைச் சாளுக்கியர் அந்நாளில் வேங்கிநாட்டை ஆண்டுவந்தனர். வேங்கி நாடு என்பது கோதாவரி, கிருஷ்ணா தீரமாகிய இன்றைய ஆந்திர மாநிலப்பகுதி. குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சிங்காசனம் ஏறுமுன், அவனுக்குப் போட்டியாக அவன் சிற்றப்பன் மகனான இரண்டாம் விசயாதித்தியன் எழுந்தான். இருவர் பூசல்களுக்கிடையே மேலைச் சாளுக்கியப் பேரரசனான விக்கிரமாதித்தியன் நாட்டையே கைக்கொண்டான்.
அப்போது சோழப் பேரரசை ஆண்டவர்கள் இராசேந்திரன் புதல்வர்கள். விக்கிரமாதித்தியனுடன் போரிட்டு ஒருவன் மாண்டான்.இரண்டாவது புதல்வனாகிய இரண்டாம்