புதியதோர் உலகம் செய்வோம்
17
ஒருப்படவில்லை. மலைநாட்டு வீரர்களாகிய அவர்கள் அடிக்கடி அவன் கோட்டையின் வெளியிடங்களில் வந்து சூறையாடித் தொல்லை கொடுத்தனர். ஆகவே, குலோத்துங்கன் மீண்டும் போர்க் கோலம் பூண்டான். மகாநதி கடந்து சென்று அந்த நாட்டில் வலதுசாரி இடதுசாரியாகச் சுற்றித் தன் வீரத்தின் புகழை நிலை நாட்டினான். அவன் சிறிய ஆட்சி விரிவுற்றது. மகாநதி முதல் கங்கைவரை அவன் காலடியின்கீழ் கிடந்தது.
சோழப் பேரரசுக்கு இப்போதும் குலோதுங்கன் அரசு ஒப்பானதல்ல.ஆனால் அவன் வீரம் கண்டு அவன் உறவினரான கீழச்சாளுக்கிய, சோழ அரசரும், விக்கிரமாதித்தனும் புழுக்க மடைந்தனர்.அவர்கள் அனைவரும் ஒருங்குகூடி அவனை வீழ்த்த எண்ணினர்.இக்கருத்துடன் சோழப் பேரரசனான வீரராசேந்திரன் தன் மகளை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
சோழப்பேரரசுக்கு இப்போது வடக்கே புது வலுந் தோன்றி விட்டது. ஆனால் இப்போதும் கிழக்கே கடாரத்திலுள்ள ஒரு பாதியில் சோழர் கைவரிசை மிகவும் வலுக் குறைந்ததாகவே
ருந்தது. அங்கே எப்போதும் சோழர் மண்டலாதிபதிகளாக இருந்த இளவரசர் குடியில் போட்டி பூசல்கள் மிகுதியாயிருந்தன. குலோத்துங்கன் இவற்றைப் பயன்படுத்தி, சோழப் பேரரசிலேயே கீழ்பாதியைக் கைக்கொள்ள முனைந்தான்.
பஸ்தர் மக்கள் குரங்குப்போர் முறையில் கைதேர்ந்தவர்கள், கீழச்சங்கர் கடலில் கலஞ் செலுத்துவதில் வல்லவர்கள். இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள வீரர்களைக் குலோத்துங்கன் ரட்டினான் ஒரு சிறிய கப்பற்படையும், அதனுடன் கடல்கடந்து செல்லும் ஒரு நிலப் படையும் உருவாயின. ஆவலுடன் அவன் கடாரத்தின் மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு ஆண்டு களுக்குள் கடாரம் வீழ்ந்தது. அவன் கடாரத்தின் பேரரசனானான்.
து
சோழப் பேரரசுக்கெதிராகத் தன் வலுவைப் பெருக்க அவன், இன்னொரு பேரரசின் உதவியை நாடினான். அவன் சீனப் பேரரசருடன் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டு கடாரத்திலே வேரூன்றினான். அவன் ஆட்சியில் கடாரத்தின் செல்வமும், புகழும் தமிழகத்தின் செல்வத்துடனும் புகழுடனும் போட்டி யிட்டன.