பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

புதிய அறிவியல் துறை

-

அப்பாத்துரையம் - 4

இன்றைய அறிவியல்கள், வரலாறு, சமுதாய இயல், பொருளியல், கலைகள் போன்ற வாழ்வியல் துறைகளும் சரி, இயல்நூல்களும் தொழில் துறைகளும் சரி, முதலாளித்துவத்துடன் வளர்ந்த வளர்ச்சிகள் கீழை நாட்டின் அறிவியலில் மிகுதி. வளர்ச்சியடையாததன் காரணமே அது ஆரியம்-அதாவது அழுகல் முதலாளித்துவத்துடன் கட்டப்பட்டிருந்ததுதான். ஆரியம் அவ்வறிவை மந்திரவாதம், செப்படி வித்தை, கடவுள் மாயங்களுக்கே பயன்படுத்திற்று. மேனாட்டு அறிவியல் இதனைவிட உயர்தர முதலாளித்துவத்துடன் வளர்ந்ததனால், ஒருபடி உயர்வு அடைந்துள்ளது. ஆனால், அதுவும் மூன்று குறைகளை உடையது. அழிவு ஆதாயம் இந்த இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டே அது அறிவியலை வளர்த்துப் போற்றுகிறது.நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன்படுவது போல அது ஆக்கத்துக்குப் பயன்படினும் அழிவே அதன் முக்கியக் குறிக்கோள். இரண்டாவது ஆதாயக் குறிக்கோள் இதை நன்கு விளக்கும். ஒருவர் ஆதாயம், மற்றவர் நட்டம், அதாவது போட்டி; ஒருவர் அல்லது ஒருசிலர் ஆதாயம், பலர்நட்டம் அதாவது சுரண்டல் என்ற அழிவு அடிப்படையிலே தான் அது சிந்திக்கிறது. ஒருவருக்கு ஆதாயம் மற்றவர்க்கும் ஆதாயம். (அதாவது தீயுடன் சேர்ந்த தீ போல, காதல் போல) இருபுறமும் ஆதாயம் என்பதோ, எல்லார்க்கும் ஆதாயம் - தனிமனிதனுக்கும் ஆதாயம் என்பதோ இன்றைய முதலாளித்துவ அறிவியலின் சிந்தனைக்கு எட்டாத ஒன்று.

தவிர, அறிவியலின் அறிவையும் சமுதாய அறிவையும் சேர்த்தால், சமுதாய அறிவு முதலாளியின் மனதை மாற்றி அவன் ஒத்துழைப்பு பெற்றே முதலாளித்துவத்தை அழிப்பதாக மாற முடியும். திராவிட முன்னேற்றக் கழகம் இத்துறையில் அறிவுப் படையை உண்டுபண்ணுவதுடன் அதனை அதில் ஈடுபடுத்திப் புதிய திராவிட நாட்டுச் சிற்பிகளை மட்டுமல்ல, புதிய சமுதாயச் சிற்பிகளை, புதிய உலகச் சிற்பிகளை உண்டுபண்ணப் பாடுபடும்.

புரட்சிகரமான சட்ட திட்டங்கள்

முதலாளித்துவ அடிப்படையான சட்டங்கள், திட்டங்கள் மட்டுமல்ல; நிலையங்கள், அறிவு மரபுகள், சிந்தனை மரபுகள் பல.