6. பண்டைத் தமிழர் ஒப்பனைக் கலை
மேலை நாட்டினரிடையே, பெண்டிர் இதழுக்கும் நகங்களுக்கும் செவ்வண்ணம் பூசுவதையும், முகத்துக்கும்
நறுந்துகள்
டுவதையும், முகத்துக்கு மென்கழுநீர் வண்ணச்சாயம் தோய்ப்பதையும் பலர் பார்த்திருப்பர். மேனியை மென்மையாக்கி வெண் பளிங்கு நிறம் தர வாசவெந்நீர், பனிநீர்க் குளிப்பு வகைகள் உண்டு என்பதையும் சிலர் கவனித்திருப்பர்.
புகையிலை, தேயிலை, காப்பி ஆகிய கெட்ட பழக்கங்களைப் போலவே, இந்த நல்ல அல்லது கேடற்ற நாகரிகப் பழக்கங்களும் கீழ் திசையிலிருந்து சென்றவை என்பதைப் பலர் அறிவர். ஏனெனில் குளிப்பு வகைகள் இன்றும் துருக்கிய முழுக்கு (Turkish bath) சப்பானிய முழுக்கு (Japanese bath) என்று வழங்குகின்றன. சவர்க்காரங்கள் கூட ஒரு காலத்தில் பெரும்பாலும் துருக்கிய சவர்க்காரம் (Turkish Soap) என்று விளம்பரப்படுத்தப்பட்டதுண்டு.
அழகுக்கலையின் பகுதியாகிய உடல் தேய்ப்புக்குரிய ஆங்கிலச் சொல் (Shampoo) துருக்கியச் சொல்லே.
ஆரியர் வருகைக்குள் இந்தியாவெங்கும் இக்கலைகள் பரவியிருந்தன. சமஸ்கிருதம் பிறக்குமுன் புத்த சமண இலக்கியங் களிலும், தொடக்கக்கால சமஸ்கிருத இலக்கியத்திலும் இக்கலைகள் அழியாதிருந்தன என்பதற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் பலகலைகளை அழித்த ஆரிய நாகரிகம் இதையும் இங்கே தடந்தெரியாமலாக்கி வெளி நாடுகளிலிருந்து வந்தபின் மீண்டும் ஏற்பதில்தான் முந்திக்கொள்கிறது.
பண்டைத் தமிழரிடையே கலை இயல்கள் தழைத்திருந்தன என்பதற்குக் கவிதையில்கூடச் சங்ககாலத் தமிழர் காட்டிய