புதியதோர் உலகம் செய்வோம்
27
பகுத்தறிவு சான்றுபகரும். என்ன கலைகள், எத்தனை கலைகள் இருந்தன என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சியாளர் காண முனைவது பயன்தரும். ஆனால் அந்த ஆராய்ச்சியை அவ்வத்துறையில் இந்நாளையக் கலையறி வுடையோர் செய்தலே முழுநிறை பயன்தரும்.
தமிழ்க்கலைகள் அழிந்ததற்குப் பெரிதளவு காரணம் கலை வளர்ப்பதற்கென்றே அமைந்த சங்கங்களையும், அதனையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர், விறலியர் வகுப்பினரையும் ஆதரிப்பதையும் மதிப்பதையும் விடுத்துத் தமிழ் மன்னரும் தமிழகச் செல்வரும் தமிழ் மக்களும் படிப்படியாக ஆரியப்போலி அறிஞரையும், போலி இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதத்தையும், போலிமதமாகிய ஆரியமதத்தையும் ஆதரித்து நாட்டுப் பகைவர்களாகச் சென்ற இரண்டாயிரம் ஆண்டு வாழ்ந்து வந்திருப்பதுதான் தமிழக வாழ்வில் உச்சமதிப்பிலிருந்த பாணர், விறலியர் ன்று தமிழர் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கோயிலின் மீளா அடிமைகளான வேளாளர்குடி ஆகியுள்ளனர்.
சை
தமிழரிடையே வழங்கிய அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரமும் பெருங்கதையும் பெருமைப்படப் பேசுகின்றன.
“பண்ணுங்கிளையும் பழித்ததீஞ்சொல் எண்ணெண்கலையோர் இருபெருவீதி”
என்று சிலப்பதிகார ஊர்காண்காதை அறுபத்துநான்கு கலை வளர்த்த வகுப்பினர் இருந்த வீதி குறிக்கிறது.
“யாழ்முதலாக அறுபத்தொடு நான்கு
ஏரிளமகளிர்”
என்று அக்கலைபயில் நங்கையரைப் பெருங்கதை குறிக்கின்றது.
கலைகள் பலவற்றின் பெயர்களைத் தரும் இன்னொரு பகுதி மணிமேகலை ஊரலர் காதையில் காணப்படுகிறது.
"வேத்தியல், பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும்